மத்திய அரசு HYBRID ஏடிஎம் மூலம் CHANGE இல்லை பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அன்றாடம் மக்கள் சந்திக்கும் CHANGE இல்லை என்ற பிரச்னைக்கு தீர்வு காண, பிரத்யேக ஏடிஎம்-ஐ கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஏடிஎம்-களில் 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் மட்டும் கிடைக்கும் நிலையில், அதனை சில்லறைகளாக மாற்றுவதற்கு பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சில்லறை நோட்டுகளை வழங்கும் ஹைப்ரிட் (HYBRID) ஏடிஎம்-ஐ கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதாவது, 500 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் இயந்திரத்திற்குள் செலுத்தி 10, 20 50 என தேவைப்படும் மதிப்பீட்டில் அதனை மாற்றிக் கொள்ளலாம் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் ஹைப்ரிட் (HYBRID) ஏடிஎம், சோதனை முறையில் பயன்படுத்தப்படுகிறது. பணம் வழங்கும் ஏடிஎம்-களிலேயே அதனை சில்லறைகளாக மாற்றும் ஒருங்கிணைந்த அம்சத்தை இணைக்கும் பணியும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்ப, 10, 20, 50 ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் அச்சிடவும் ஆர்பிஐ திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பையில் நடைபெறும் சோதனை வெற்றியடையும் பட்சத்தில், நாடு முழுவதும் ஹைப்ரிட் ஏடிஎம் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



