தொழிலாளர்களின் கணக்குகளில் ரூ.2567.66 கோடி பி.எஃப்..!
தொழிலாளர்களின் கணக்குகளில் ரூ.2567.66 கோடி பி.எஃப்..!
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமரின் ஏழைகள் நலத் திட்டத்தின் கீழ், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர்களின் பங்கு மற்றும் நிறுவனங்களின் பங்கு ஆகிய இரண்டையுமே 2020 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை அரசு செலுத்தியது.
தகுதி உள்ள 38.82 லட்சம் தொழிலாளர்களின் கணக்குகளில் ரூ.2567.66 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) சந்தோஷ்குமார் கங்க்வார் தெரிவித்துள்ளார்.