திருச்சியில் புற்றுநோய்க்கு குறைந்த செலவில் சிறந்த சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை!
திருச்சியில் புற்றுநோய்க்கு குறைந்த செலவில் சிறந்த சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை!
நவீன சமூகம், அவசரகதியில் தனது உணவுப் பழக்கத்தை இழந்துவிட்டது. போதைப் பொருட்களால் தன்னுடைய ஒட்டு மொத்த உடல் சக்திகளையும் இழந்து அடுக்கடுக்கான நோய்களுக்கு ஆட்பட்டு வருகிறது.
நச்சுக்கள் கலந்த பால், காய்கறிகள், பிராய்லர் கோழி, மாமிசங்கள், துரித உணவு வகைகள் என இவை அனைத்துமே மனிதனின் உணவுப் பழக்கத்தில் ஒன்றாக பின்னிப்பிணைந்து காணப்படுகின்றன. ஆனால் இந்த நச்சு மிகுந்த உணவு மா வகைகள் தான் மனித சமூகத்திற்கான ஸ்லோ பாய்சனாக மாறி நோய்களுக்கு முக்கிய காரணியாக அமைகின்றன.
புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள்
“தவறான உணவுப் பழக்கம், கலப்பட உணவு, புகைப்பிடித்தல், புகையிலை பொருட்கள் உபயோகிப்பது, திருமணம் தள்ளிப்போவது, பெண் குழந்தைகள் சீக்கிரம் வயதுக்கு வருவது, மாதவிடாய் பிரச்சனைகள், குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தவிர்ப்பது, தவறான உடலுறவு போன்றவை புற்றுநோயை உண்டாக்கும் காரணியாக விளங்குகிறது.
நோய் வந்தாலே மரணம் என்று அச்சுறுத்தும் உயிர் கொல்லி நோயான புற்றுநோயை எதிர்கொள்ள மருத்துவத் துறை அதிநவீன முறைகளைக்கையாண்டு வருகின்றன.
இவ்வாறான அதிநவீன முறைகளைப் பின் பற்றி எளிய மக்களுக்கான, உயர்தர சிகிச்சையை, குறைந்த செலவில், குறுகிய காலத்தில் நிகழ்த்தி புற்றுநோய் உள்ளவருக்கு விடியலை ஏற்படுத்துகிறார் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் செந்தில்குமார்.
எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவம் எட்டாக்கனி என்று சொல்வார்கள். அந்த சொல்லை திருச்சி, தில்லைநகர், 4வது கிராஸில் (மேற்கு) அமைந்துள்ள சில்வர் லைன் மருத்துவமனை பொய்யாக்கி உள்ளது. மருத்துவர் செந்தில்குமார் மருத்துவமனை உள்ளே நுழைந்தவுடனேயே சிகிச்சைக்காக காத்திருக்கும் பெண்கள் ஒவ்வொருவரும் இன்முகத்தோடு மருத்துவருக்கு வணக்கம் சொல்வதன் மூலமும், நன்றி சொல்வதன் மூலமும் அவருடைய செயல்பாடுகளும் மாண்பும் தெரிகிறது.
எந்த சிகிச்சைக்கும் முதலில் தேவை நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை தான். மருத்துவர் செந்தில்குமாருடன் பேசினால் அந்த தன்னம்பிக்கை நோயை விரைவில் குணப்படுத்திவிடும். விவசாயிகள், ராணுவ வீரர்கள், காவல்துறை பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவ ஆலோசனையை முற்றிலும் இலவசமாக வழங்குகிறார். அத்துடன் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் நோயாளிகளிடம் எவ்வித கட்டணமும் பெறாமல் சிகிச்சை அளித்து வருகிறார். மாதத்திற்கு 200 அறுவை சிகிச்சை என ஆண்டிற்கு 2,400 பேருக்கு புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை செய்து வரும் மருத்துவர் செந்தில்குமார் 1998ல் எம்.பி.பி.எஸ். முடித்து, 2002ல் எம்.எஸ்., 2009ல் எம்.சி. என மருத்துவ மேற்படிப்பு படித்து 12 வருடங்களாக புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணராக இயங்கி வருகிறார்.
பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே காணப்படுகிறது. அத்துடன் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், இரைப்பை புற்றுநோய், சினைப்பை புற்றுநோய் என பெண்களை பாதிப்பதாக உள்ளன. கீமோதெரபி (மருந்து மூலம் சிகிச்சை), அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, லேப்ரோஸ்கோபி சிகிச்சை என்று புற்றுநோய்க்கான உயர்தர சிகிச்சைகள் அனைத்தும் இங்கு கிடைக்கிறது. திருச்சியில் முழுக்க முழுக்க லேப்ரோஸ்கோப்பி வழியாக சிகிச்சை அளிக்கும் முறை சில்வர்லைன் மருத்துவமனையில் மட்டுமே உள்ளது.
லேப்ரோஸ்கோபி சிகிச்சை மூலம் மிகமிகக் குறைந்த செலவில், குறைந்த நேரத்தில், சிறந்த சிகிச்சை அளிக்க முடியும். ஒருவரை புற்றுநோய் தாக்கினால் அவரை 3வது கட்டம் வரை கண்டிப்பாக காப்பாற்ற முடியும். நான்காவது கட்டத்தில் உள்ளவர்கள், தங்களுக்கு ஏற்படும் வலிக்கு பயந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். உணவு அருந்த முடியாமல் தவிக்கின்றனர். இவ்வாறு உள்ளவர்களுக்கு என்று அரசிடம் உரிய சிறப்பு அனுமதி பெற்று வலி குறைப்பதற்கென்றே தனி மாத்திரைகளும் வழங்கி வருகிறோம்.
பக்கவிளைவுகள் இல்லாத தரமான சிகிச்சையை இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதி பெற்று செய்து வருகிறோம். புற்றுநோய் வராமல் தடுக்க உடல்நிலை குறித்த கவனம் ஒவ்வொரு பெண்களுக்கும் தேவை” என்கிறார் மருத்துவர் செந்தில்குமார்.