கனரக வாகன இலவச ஓட்டுநர் பயிற்சி
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் சாலை போக்குவரத்து நிறுவனம் இணைந்து இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்க உள்ளது. திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அளிக்கப்படும் இந்த 12 வார கால இலவச பயிற்சி பெற ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். வயது குறைந்தபட்சம் 20- வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.
இலகுவர வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். அத்துடன் பொதுப் பணிவில்லை பெற்றிருக்க வேண்டும். கல்வி பயின்று கொண்டிருப்பவர்கள், பணியில் இருப்பவர்கள் ஏற்கனவே கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் இப்பயிற்சியில் சேர முடியாது. தகுதியானோர் இதற்கு விண்ணப்பிக்க https://trainingprovider-tnskill, tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.