விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரம் மானியம்
சமீபத்தில் வேளாண்மைத்துறையானது விவசாயிகள் அமைக்கும் ஒருங்கிணைந்த பண்ணையங்களுக்கு பின்னேற்பு மானியமாக ரூ.60 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு ஒரு பசுமாடு, 10 ஆடுகள், 10 கோழிகள், ஒரு மண்புழு உரத்தொட்டி, ஒரு தேனி பெட்டி, 10 கொய்யா மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன.
இதன் மூலம் விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணையத்தை அமைத்து பராமரிக்க வேண்டும். இத்திட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் கறவை மாடு, ஆடு மற்றும் கோழிகளை தொடர்ந்து 3 ஆண்டுகள் பராமரிக்க வேண்டும். இதற்காக விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக ரூ.60 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுகிறது.