ரூ.23 ஆயிரம் கோடி கடன் வழங்கிய ஹெச்.டி.எப்.சி. வங்கி
இந்தியாவில் 6 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளன. கொரோனா ஊரடங்கு காலத் தில் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க மத்திய அரசு கொண்டு வந்த கடன் உத்தரவாதத் திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ரூ.23 ஆயிரம் கோடியைக் கடனாக ஹெச்.டி.எப்.சி. வங்கி வழங்கியுள்ளது.
வரும் காலங்களில் மேலும் அதிக அளவில் அதிக எண்ணிக்கையிலான சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என ஹெச்.டி.எப்.சி. வங்கியின் வர்த்தகப் பிரிவு மூத்த செயல் துணைத் தலைவர் சுமந்த் ராம்பால் கூறியுள்ளார்.