இனி தங்கத்தில் ஹால் மார்க் முத்திரை கட்டாயம்..!
தங்கத்தின் தரத்தை நிர்ணயிக்க 916 கேடிஎம் என்ற அளவுகோல் பயன்படுத்தப்படுகிறது. அதே போல் ஹால்மார்க் முத்திரையும். ஒரு சில நகைக் கடைகளில் ஹால் மார்க் முத்திரை இல்லாமல் நகை விற்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தற்போது ஒரு அதிரடியை அறிவித்துள்ளது.
வருகிற ஜூன் 1-ஆம் தேதி முதல் ஹால்மார்க் முத்திரையுடன் தான் தங்க நகை விற்பனை செய்ய வேண்டும். ஹால் மார்க் முத்திரை இல்லாமல் தங்க நகை விற்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஹால்மார்க் முத்திரையில்லாமல் நகை விற்பது அறிந்தால் பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம் என மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் லீலா நந்தன் தெரிவித்துள்ளார்.