லாபம் தரும் வெளிநாட்டு பண்டுகள்
நமது போர்ட்போலியோவில் வெளிநாட்டு பங்குகள் மீதான முதலீடு 10 சதவீதமாவது இருக்க வேண்டும். வளரும் மற்றும் உலகை ஆளும் நிறுவனங்களில் நாம் முதலீடு செய்ய விரும்பினால் வெளிநாட்டு பண்டுகளைத்தான் நாம் நாட வேண்டும். பணவீக்கத்தால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதால் அதை ஈடுகட்ட வெளிநாட்டு பண்டில் முதலீடு செய்ய வேண்டியுள்ளது.
இவ்வகை பண்டுகளில் முதலிடு செய்கையில், இந்திய ரூபாயின் மதிப்பு குறையும்போது லாபம் பார்க்கலாம். டெக்னாலஜியை முதன்மையாக கொண்டு செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், இவ்வகை பண்டுகளுக்கு பாதிப்பு ஏற்படும். இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட சில முக்கிய வெளிநாட்டு பண்டுகள் சிறந்த லாபம் தருவதாக நிபுணர்கள் பரிந்துரை செய்தது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அவை 1) எடெல்வைஸ் யூஎஸ் டெக்னாலஜி ஈக்விட்டி பண்ட் 2) மோதிலால் ஆஸ்வால் எஸ் அண்ட் பி 500 இன்டெக்ஸ் பண்ட் 3) மோதிலால் ஆஸ்வால் நாஸ்டெக் 100 இடிஎப் ஆப் பண்ட் 4) பிஜிஐஎம் குளோபல் ஈக்விட்டி ஆப்பர்சூனிட்டிஸ் 5) பிராங்கிளின் இந்தியா ஃபீடர் பிராங்கிளின் யூஎஸ் ஆப்பர்சூனிட்டிஸ் பண்ட்