கொரோனா சிகிச்சை தொகையை காப்பீட்டு நிறுவனங்களிலிருந்து
முழுமையாக பெறுவது எப்படி..
லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, கொரோனா மூலம் ஏற்படும் இறப்பை பிற வியாதிகள் மூலம் ஏற்படும் இறப்பைப் போலவே ஏற்றுக்கொள்கிறது. இதனால் எந்தப் பாலிசியாக இருந்தாலும் எல்ஐசியில் கொரோனா மூலம் ஏற்படும் இறப்புகளுக்கும் இன்சூரன்ஸ் திட்டத்தின் படி முழுமையான க்ளெய்ம் கிடைக்கும்.
பாசிலிதாரர் கொரோனா மூலம் இறக்கும் பட்சத்தில் அவர் தேர்வு செய்துள்ள நாமினிக்கு இன்சூரன்ஸ் தொகை முழுமையாக அளிக்கப்படும் என விளக்கம் அளித்துள்ளது எல்ஐசி நிறுவனம். 2020ஆம் ஆண்டில் கொரோனா மூலம் ஏற்பட்ட மரணங்களுக்கும் எல்ஐசி நிறுவனம் முழுமையாகக் க்ளெய்ம் தொகையைச் செட்டில் செய்துள்ளது.
கொரோனா தொற்று மூலம் எல்ஐசி பாலிசிதாரர் மரணம் அடைந்தால் பாசிலியின் நாமினி அருகில் இருக்கும் எல்ஐசி அலுவலகத்திற்குச் சென்று death claim Intimation, பாலிசிதாரரின் இறப்புச் சான்றிதழ், பாலிசியின் நகல் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்புவோர் தாங்கள் மருத்துவமனையில் செலவழித்த பணத்தை இன்சூரன்ஸ் மூலம் க்ளெய்ம் செய்யும் போது 40% முதல் 60% வரை மட்டுமே கிடைக்கிறது என்ற புலம்பல் பலரிடமும் எழுந்தது. கூடுதல் க்ளெய்ம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதே பலரின் கேள்வி..!
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் போது செலவழிக்கப்படும் தொகைக்கான அனைத்து ரசீதுகளையும் கட்டாயமாக கேட்டுப் பெற வேண்டும். உடலில் உள்ள நோய்களை கண்டறிந்து, அறிக்கைகள், அதற்கான ரசீதுகள், மருந்துக்கான ரசீதுகள் என அனைத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும். கொடுக்கப்படும் பணம் அனைத்திற்கும் ரசீது கேட்டுப் பெற வேண்டும். ரசீதின்றி செலுத்தும் பணத்தை க்ளெய்ம் செய்யும் போது செலவு கணக்கில் காட்ட முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். டிஸ்சார்ஜ் ஆகி வந்த பிறகு க்ளெய்ம் செய்யும் போது க்ளெய்ம் விண்ணப்பத்தில் மறக்காமல் மருத்துவர் அல்லது உயர் அதிகாரியின் கையப்பம், சீலுடன் கேட்டு பெறவும்.
கொரோனா நோயால் இறக்க நேர்ந்தால் அவரது உடைமைகளை பெறும் போது மறக்காமல் சிடி ஸ்கேன் பிலிம் கேட்டு வாங்கி வைக்க வேண்டும். க்ளெய்ம் செய்யும் போது அவரின் அடையாள அட்டை நகல் மற்றும் இறப்பு சான்றிதழை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்துத் தர வேண்டும். கூடுதல் க்ளெய்ம் பெற மேற்கூறிய அனைத்து முறையினை கையாள வேண்டும்.
முக்கியமாக, மருத்துவமனையிலிருந்து பெறப்படும் ரசீது மற்றும் டிஸ்சார்ஜ் சர்டிபிக்கேட் என அனைத்தையும் ஒரு ஜெராக்ஸ் எடுத்து வைத்த பின்பே க்ளெய்ம் பணியை மேற்கொள்ள வேண்டும்.