QR CODE ஸ்கேன் செய்தால் பணம் போய்விடும்… SBI எச்சரிக்கை…
பணம் செலுத்த வேண்டிய இடங்களைத் தவிர வேறு எங்கேயும் கியூ.ஆர்.கோட் ஸ்கேனர் பயன்படுத்த வேண்டாம் என ஸ்டேட் பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா நோய் பரவல் காரணமாக மக்கள் வீடுகளிலிருந்து வெளிவர முடியாத சூழ்நிலையில் அனைவரும் பணவர்த்தனை மற்றும் பொருட்கள் வாங்குவது என அனைத்தும் ஆன்லைன் மூலம் தற்போது அதிகரித்துள்ளது.
இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் சில கும்பல்கள் மக்களிடம் பண மோசடியில் ஈடுபடுவதற்கு முயற்சிப்பதாகவும், வாடிக்கையாளர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கும்படியும் ஸ்டேட் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. பணம் செலுத்துவதற்கு தவிர வேறு எதற்காகவும் க்யூ.ஆர்.கோடை பயன்படுத்த வேண்டாம் என்று வாடிக்கையாளர்களை ஸ்டேட் பேங்க் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக ஒரு வீடியோ ஒன்று ஸ்டேட் பேங்க் வெளியிட்டு உள்ளது. இதில் வங்கி கணக்கில் இருந்து எவ்வாறு பணம் மோசடி செய்யப்படுகிறது என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
மேலும் பணம் செலுத்துவதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் பணத்தை பெறுவதற்காக அதை பயன்படுத்த வேண்டாம் என்றும் சிலர் கியூ ஆர் கோட் ஸ்கேனர் செய்தால் பணம் வரும் எனக்கூறி உங்களின் கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் எடுத்து விடுவார்கள்.எனவே க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்யும் போது எச்சரிக்கையுடன் இருங்கள் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.