சேமிப்புக்கு அதிக வட்டி தரும் வங்கிகள்!
பொதுத் துறை வங்கிகள், சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்த அளவிலேயே வட்டி வழங்குகிறது. அதே வேளையில் சிறிய நிதி நிறுவனங்கள் மற்றும் சில தனியார் வங்கிகள் பொதுத் துறை வங்கிகளை விட கூடுதலாக வட்டி வழங்குகிறது.
தற்போது சேமிப்பு கணக்கிற்கு அதிக வட்டி தரும் 5 தனியார் வங்கிகள் : DCB வங்கி 3%- 6.75% ஸிஙிலி வங்கி 4.25%-6.25% பந்தன் வங்கி 3%–6% இந்துஸ்இந்த் வங்கி 4%-5.50% எஸ் வங்கி 4%-5.25% வரை வட்டி வழங்குகிறது.
பொதுத்துறை வங்கிகளில் அதிக வட்டி தருவது : பஞ்சாப் நேஷனல் வங்கி 3% -3.50%, IDBI வங்கி 3% – 3.40%, கனரா வங்கி 2.90% முதல் 3.20%, பாங்க் ஆப் பரோடா வங்கி 3.20%, பஞ்சாப் & சிந்த் வங்கி 3.10% வரையிலும் வட்டி வழங்கப்படுகிறது.