காலாவதியான எல்ஐசி பாலிசிகளை புதுப்பிக்க சிறப்புத் திட்டம்
கொரோனா போன்ற கடினமாக கால சூழலில் வாடிக்கையாளர்களின் நலன் கருதி காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ள சிறப்புத் திட்டத்தை எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 9ல் தொடங்கிய இந்த பாலிசி புதுப்பிப்பு திட்டம் வரும் அக்டோபர் 9ம் தேதி வரையில் அமலில் இருக்கும். அது வரையில் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பிரீமியம் செலுத்த முடியாமல் காலாவதியாகிப் போன பாலிசிகளை வாடிக்கையாளர்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இதன் மூலம் அவர்கள் ஆயுள் காப்பீட்டு வசதியை தொடர்ந்து பெறுவதுடன் பழைய பாலிசிகளின் காப்பீட்டு பலன்களையும் மீண்டும் பெற்று பயனடைய முடியும். காலாவதியான பாலிசி புதுப்பித்தலுக்கு பாலிசிதாரர்கள் தாமத கட்டண சலுகையாக 20 சதவீதத்தைப் பெறலாம். அதேநேரம் ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையில் 25 சதவீத சலுகையை அவர்கள் பெறலாம் என எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.