நம்பர் பிளேட்டில் எண்கள் இப்படி எழுதாவிட்டால் அபராதம்..!
விபத்து, வாகன கடத்தல் மற்றும் செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களின் போது வாகனங்களை அடையாளம் காணும் விதமாக வாகனங்களுக்கு பிரத்யேக பதிவெண்கள் வழங்கப்படுகின்றன. இத்தகைய நம்பர் பிளேட்டுகளை பலரும் வாகனங்களில் தங்களு க்கு விருப்பப்பட்ட வடிவங்களில் வண்ணங்களில் பதிந்து கொள்கின்றனர்.
இதனால் அவசர நேரத்தில் இத்தகைய வாகனங்களின் எண்களை கண்டறிய முடிவதில்லை. மேலும் சிலர் தமிழ் எழுத்துக்களில் வாகனங்களின் எண்களை எழுது கின்றனர். இதனால் வாகனங்களின் எண்களை கண்டறிய முடிவதில்லை. இவற்றை களைய தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
வாகன பதிவெண்கள் அங்கீ கரிக்கப்பட்ட வடிவில் மட்டுமே இருக்க வேண்டும். மேலும், பதிவெண்களைத் தவிர வேறு எந்த எழுத்துக்களோ, படங்களோ, பெயர்களோ இருக்கக் கூடாது என தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து சட்டம் பிரிவு 177இன் கீழ் ரூ.100 வரை அபராதம் விதிக்கப்பட இருக்கின்றது. நம்பர் பிளேட்டில் பேன்சி எண்கள் பயன்படுத்தியிருந்தாலோ அல்லது கண்டறிவதில் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் இருந்தாலோ இந்த அபராதம் விதிக்கப்படும்.
பொதுவாக வாகனங்களில் நம்பர் பிளேட் எப்படி இருக்க வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
தனி நபர் வாகனம் எனில் அந்த வாகனத்தில் இடம் பெற்றிருக்கும் நம்பர் பிளேட் பின்னணியில் வெள்ளை நிறத்தையும், எழுத்துக்கள் மற்றும் எண்கள் கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும். இதுவே, பொது பயன்பாட்டு (வணிக) வாகனம் எனில் பின்னணியில் மஞ்சள் நிறம் பயன்படுத்தப்பட்டிருக்க வேண் டும். எழுத்து மற்றும் எண்கள் கருப்பு நிறத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
இதேபோல், எலெக்ட்ரிக் வாகனங்களில் நம்பர் பிளேட்டில் பச்சை நிற பின்னணியில், வெள்ள நிற எழுத்துக்கள் மற்றும் எண்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது விதியாகும். இதே போன்று, இரண்டு (பைக் மற்றும் ஸ்கூட்டர்) அல்லது மூன்று சக்கர (ஆட்டோ ரிக்ஷா) வாகனங்களில் நம்பர் பிளேட்டானது 200×100 மிமீ அளவில் இருக்க வேண்டும் என்பது விதியாகும். இதில், இருசக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்டில் 40 மிமீ உயரத்திலும், 7 மிமீ தடிமனிலும், 5 மிமீ இடைவெளியிலும் எழுத்துக்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். இது பின்பக்க பிளேட்டில் இடம் பெற்றிருக்க வேண்டிய எண்களின் அளவாகும். முன்பக்கத்தில் எழுத்து மற்றும் எண்கள் 30 மிமீ உயரத்திலும், தடிமன் மற்றும் இடைவெளி 5 மிமீ அளவிலும் இருக்க வேண்டும். மூன்று சக்கர வாகனத்தின் பின்புற நம்பர் பிளேட்டில், எண்கள் மற்றும் எழுத்துக்கள் 35 மிமீ அளவிலும், தடிமன் 7 மிமீ அளவிலும், இடைவெளி 5 மிமீ கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
கார்களுக்கு முன் மற்றும் பின் ஆகிய இரண்டிற்கும் ஒரே மாதிரியான அளவுகளே கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கார்களில் இடம் பெறும் நம்பர் பிளேட்டுகளில் எழுத்துகள் மற்றும் எண்கள் 40 மிமீ உயரத்திலும், 7 மிமீ தடிமனிலும், 5 மிமீ இடைவெளியிலும் இருக்க வேண்டும்.
இலகு ரக வாகனம்: 340×200 மிமீ அல்லது 500×120 மிமீ என்ற அளவில் நம்பர் பிளேட் இடம் பெற்றிருக்க வேண்டும். இந்த நம்பர் பிளேட்டில் இருக்கும் எழுத்துக்கள் மற்றும் எண்கள் 65 மிமீ உயரம், 10 மிமீ தடிமன் மற்றும் இடைவெளியுடன் இருக்க வேண்டும். பின் மற்றும் முன் ஆகிய இரு பக்க நம்பர் பிளேட்டிலும் இந்த அளவிலேயே எழுத்து மற்றும் எண்கள் இருக்க வேண்டும்.