கடன் தருது ஃபேஸ்புக்
இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் முடங்கியுள்ள சிறுதொழில்களின் வளர்ச்சிக்கு ஃபேஸ்புக் சில நிறுவனங்களுடன் இணைந்து கடன் வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ளதாகவும், இந்த கடன் வசதி மூலம் ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கடன் பெற முடியும் என்றும், இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கடன் வசதியில் கடன் பெறுவோருக்கு ஆண்டுக்கு 17 சதவீதத்திற்குள் வட்டி இருக்கும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற ‘கனெக்ட் நிகழ்வில்’ ஃபேஸ்புக் இன்க் என்ற பெயருக்கு மாற்றாக மெட்டா என்ற புதிய பெயரை அறிவித்திருக்கிறார் மார்க் சக்கர்பெர்க். வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ஆக்குலஸ் ஆகிய நிறுவனங்களை உள்ளடக்கிய ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனம் இனி மெட்டா (விமீtணீ) என அழைக்கப்படும். ஃபேஸ்புக் சமூக வலைதள சேவை அதே பெயருடனே தொடரும்.