98.90 லட்சம் பேருக்கு ரீபண்ட் கிடைச்சாச்சி..!
மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள தகவல்படி, கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை 98.90 லட்சத்துக்கு மேற்பட்ட வரி செலுத்துவோருக்கு ரூ.1,15,917 கோடிக்கு மேற்பட்ட ரீஃபண்ட் தொகை செலுத்தப்பட்டுள்ளது.
இதில் 97,12,911 பேருக்கு வருமான வரி ரீபண்ட் தொகையாக ரூ.36,000 கோடியும், 1,77,184 நிறுவனங்களுக்கு ரூ.79,917 கோடி கார்ப்பரேட் வரி ரீஃபண்ட் தொகையும் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இதில், 2021 -22ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கான (Assessment Year) ரீபண்ட் தொகை 12,616.79 கோடி ரூபாயும் அனுப்பப்பட்டுள்ளது.