குழந்தைகள் முதல் முதியோர் வரை விரும்பி சுவைக்கும் கேக், பிஸ்கட், பன் இவைகளை தயாரித்து நமக்கு தரும் ஏ.பி.எஸ். பேக்கரி உரிமையாளரை சந்தித்தோம்.
துறையூர் மெயின்ரோட்டில் மேலவாரித்தெருவில் சிதம்பரம்பிள்ளை கல்லூரி அருகே அமைந்துள்ள அவரது தொழிற்சாலையை ஒரு பார்வை பார்த்தபின் அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்காக….
உங்கள் பெயர்?
என் பெயர் அழகிரி.
இந்த கம்பெனியின் பெயர்?
இந்த கம்பெனியின் பெயர் ஏபிஎஸ் பேக்கரி.
என்னனென்ன பொருட்கள் தயாரிக்கிறீர்கள்?
இங்கு வர்க்கி, பன், பிஸ்கட், கேக், கப் கேக், கிரீம் கேக் எல்லாமே தயாரிக்கிறோம்.
எந்தெந்த ஊர்களுக்கு அனுப்புகிறீர்கள்?
தம்மம்பட்டி வரை எங்களது பொருட்களை அனுப்பி வருகிறோம். பெரம்பலூர். சமயபுரம், அய்யம்பாளையம், திருப்பைஞ்ஞீலி, புலிவலம் வரை சரக்குகளை அனுப்புகிறோம்.
என்னென்ன வகை கேக் தயாரிக்கிறீர்கள்?
கிரீம் கேக் மற்றும் கூடை கேக் போட்டுத்தருகிறோம்.
பன்வகைகளில்?
பன் வகைகளில் கிரீம் பன், ஜாம் பன், 5 ரூபாய் பன் போடுகிறோம்.
பிஸ்கட் வகைகள்?
பிஸ்கட்டில் சால்ட் பிஸ்கட், ஜுஸ்பொரி என 10 வகையான பிஸ்கட்டுகள் போடுகிறோம்.
மேலும் அவர், எங்களிடம் பொருட்கள் தரமானதாகவும், விலை மலிவாகவும், வியாபாரிகள் ஏற்றுக்கொள்ளும் விலையிலும் இருக்கும். அதனால் நிறைய வியாபாரிகள் எங்களிடம் வாடிக்கையாக வாங்கிச்செல்கின்றனர் என்று மகிழ்வுடன் நம்மிடம் கூறினார்.
ஒரு நல்ல பன் ஃபேக்டரியை பார்த்த சந்தோஷத்துடன் நாமும் அவரிடம் விடைபெற்றோம்.