ஒரு லட்சமாக உயர்ந்த ஊக்கத்தொகை..!
“முழுநேர முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத் தொகை திட்டத்தின்கீழ், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்கள் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 2.50 லட்சத்திலிருந்து ரூ. 8 லட்சமாக உயர்த்தியும், மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 200லிருந்து ஆயிரத்து 600ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு மாணவருக்கான ஊக்கத்தொகை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.16 கோடியை அரசு கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளது.
பட்டப்படிப்பு ஊக்கத் தொகைத் திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் ஆயிரத்து
124 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்” ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் மணிவாசன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.