டிஜிட்டல் வங்கிகள் பற்றி உங்கள் அபிப்ராயம்…-? கேட்கிறது நிதி ஆயோக்..!
டிஜிட்டல் வங்கிகள் குறித்து நிதி, தொழில்நுட்பம் மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் சிறந்த நிபுணர்களுடன் கலந்தாலோசித்தும், அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனைகளின் அடிப்படையிலும், நிதி ஆயோக் அறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது.
நிதி ஆயோக் இணையதளத்தில் கிடைக்கும் இவ்வறிக்கை குறித்த கருத்துகளை வருகிற டிசம்பர் 31-க்குள் அனுப்பலாம் என தெரிவித்துள்ளது.