புத்தாண்டுக்குள் ரூ.2,000 கிடைக்கும்… விவசாயிகள் மகிழ்ச்சி!
பிரதம மந்திர கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உதவித்தொகை ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது. இதன் 10வது மாத தவணை டிசம்பர் மாத மத்தியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவசாயிகளுக்கு வழங்கும் உதவித் தொகையானது ரூ.2.000த்திலிருந்து ரூ.4,000ஆக உயர்த்தி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என்றாலும் இது குறித்து மத்திய அரசு தெரிவிக்கவில்லை. விவசாயிகளுக்கு இந்த உதவித்தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது குறித்து தகவல்களை https://pmkisan.gov.in/ என்ற ஆன்லைன் முகவரி மூலமே கண்டறியலாம்.
இந்த வெப்சைடில் ‘farmers corner’ என்ற ஆப்சன் இருக்கும். அதில் சென்று ‘Beneficiary status’ என்பதை கிளிக் செய்து, உங்களுடைய மொபைல் நம்பர், ஆதார் நம்பர் போன்ற விவரங்களை வழங்கி உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.