ரூ.5.16 கோடி ஒதுக்கீட்டில் ‘அழைப்பு மையம்’
தமிழகத்தில் தற்போது 10 லட்சத்திற்கும் மேலாக வரி செலுத்துவோர் உள்ளனர். இவர்கள் மாதந்தோறும் அறிக்கை தாக்கல் செய்வதை கண்காணிக்கவும், தாமதமாக அறிக்கை தாக்கல் செய்வதை தவிர்க்கவும் ஏதுவாக வரிசெலுத்துவோரை தொடர்ந்து வலியுறுத்த புதிய அழைப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் முதற்கட்டமாக, 40 பணியாளர்களை கொண்ட அழைப்பு மையம் ஒன்று தமிழ்நாடு மின்ஆளுமை முகமை மூலமாக சென்னையில் நிறுவப்படும் என்றும் தமிழக வணிகவரி பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது அறிவித்தார்.
அழைப்பு மையத்தில் வரும் அழைப்பிடம் முறைப்படி பேசுவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த அழைப்பு மையத்திற்கு வரும் தினசரி அழைப்பு, வரி செலுத்துவோரின் பதில் தொடர்பாக செயலாளர், ஆணையர் ஆய்வு செய்வார்கள். தமிழ்நாடு மின்னணு முகமை சார்பிலும் ஒவ்வொரு அழைப்பு தொடர்பாக ஆய்வு செய்யப்படும். இதற்காக 5.16 கோடி ஒதுக்கீடு செய்து ஆணையிடப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு இந்த அழைப்பு மைய திட்டம் செயல்பாட்டில் இருக்கும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.