டிக்கெட் ரீபண்ட்டில் ரூ.35 குறைந்ததை கேட்டு நச்சரிச்ச விடாக்கொண்ட பயணியால் ரூ.2.43 கோடி ரயில்வேக்கு செலவு
டிக்கெட் ரீபண்ட்டில் ரூ.35 குறைந்ததை கேட்டு நச்சரிச்ச விடாக்கொண்ட பயணியால் ரூ.2.43 கோடி ரயில்வேக்கு செலவு
கோட்டாவை சார்ந்த சுஜித் சுவாமி என்ற என்ஜினியர், 2017 ம் ஆண்டு ஜீலை 2 ம் தேதி கோல்டன் டெம்பிள் விரைவு ரயிலில், புது டெல்லியில் இருந்து பயணம் செய்ய ஐ.ஆர்.சி.டி.சி வளைதளத்தில் அதே ஆண்டு எப்ரல் மாதம் டிக்கெட் முன்பதிவு செய்தார். இதற்காக கட்டணம் ரூ.765 செலுத்தினார்.
ஜீலை 1 ம் தேதி, சரக்கு மற்றும் சேவை வரியான ஜி. எஸ்.டி நடைமுறைக்கு வந்தது. பயணம் காத்திருப்போர் பட்டியலில் இருந்ததால், டிக்கெட்டை கேன்சல் செய்தார்.
ரயில்வே ரூ.100 பிடித்தம் போக ரூ.665 திருப்பி தந்தது. வழக்கம் போல், ரூ.65 பிடித்தம் போக, ரூ.700 திருப்பி வந்துவிடுமென எதிர் பார்த்த மனிதருக்கு, ரூ.35 குறைவாக இருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
விசாரித்து பார்த்தார். ஜி.எஸ்.டி பிடித்தம் என ரயில்வே கூறியது. மனிதர் விடவில்லை. தகவல் அறியும் சட்டத்தில் தகவல் கோரினார். வர்த்தக சுற்றறிக்கை 43 ன் படி, ஜி.எஸ்.டி நடைமுறைக்கு முன் முன்பதிவு செய்து, ஜி.எஸ்.டி க்கு நடைமுறைக்கு பின் ரத்து செய்தால் ஜி.எஸ்.டி வரி பிடித்தம் செய்யப்படும் ரயில்வே என தெரிவித்தது.
இது நியாயமில்லை என கூறி, ரூ.35 கேட்டு நிதி அமைச்சகம், ரயில்வே வாரியம், ஜி. எஸ்.டி கவுன்சில், பிரதமர் அலுவலகம் என விளாவாரியாக கடிதம் எழுதினார். தகவல் அறியும் சட்டத்தில் பல தகவல் கோரினார். தொடர்ந்து போரடினார்.
விளைவு ஜி.எஸ்.டி நடைமுறை படுத்துவதற்கு முன் முன்பதிவு செய்திருந்தால், ரீபன்ட் தொகையில் ஜி.எஸ்.டி பிடித்தம் கூடாது என வாரியம் திருத்த உத்தரவு வெளியிட்டது. கையோடு 2019 ம் ஆண்டு மே 1 ம் தேதி இவருக்கு ரூ. 33 ஐயும் ரயில்வே திருப்பி தந்தது. மனிதர் விடவில்லை எங்கே என் மீதி ரூ.2 என கேட்டு ரயில்வேயை தொடர்ந்து நச்சரிக்க ஆரம்பித்தார்.
சேவை வரிக்கான பின்னத்தொகை சரிசெய்ததால் ரூ.2 குறைவு என ரயில்வே பதில் தந்தது. இவரும் சலைக்காமல் ரூ.2 கேட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக ரயில்வேக்கு தொல்லை கொடுத்து வந்தார். பொறுமை இழந்த ரயில்வே, இரண்டு ரூபாயை அவரது வங்கி கணக்கிற்கு கடந்த வாரம் அனுப்பி வைத்ததோடு, அது அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டாதா, என உறுதி செய்து நிம்மதி பெருமூச்சு விட்டது.
இதனால் ஜி.எஸ்.டி நடைமுறைபடுத்திய குளறுபடியில், 2017 ம் ஆண்டு டிக்கெட் முன்பதிவு செய்து கேன்சல் செய்த 2 லட்சத்து 98 ஆயிரம் பேருக்கும் ரீபன்ட் தர வேண்டிய சூழல் ரயில்வேக்கு வந்தது. வேறுவழியின்றி ரயில்வே வாரியம் அனைவருக்கும் தர ஒப்புதல் தந்தது. ரயில்வேக்கு இந்த ரீபன்ட் செலவு ரூ.2.43 கோடியாம். ஒரு பயணியிடம் சிக்கி ரயில்வே விழிபிதுங்கி இருப்பது எண்ணவோ உண்மை.
-மன்னை மனோகரன்