வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு
கச்சா எண்ணெய் விலை உயர்கையில் சமையல் எரிவாயு உருளையின் விலையும் உயரும் இது வாடிக்கை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு இவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.2,508க்கு விற்பனையாகி வந்தது. தற்போது 19 கிலோ எடைக்கொண்ட உருளை ரூ.134 குறைக்கப்பட்டு, உருளையின் விலை ரூ.2,373 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலையில் மாற்றம் இல்லை.