145 வருட பராம்பரியமிக்க திருச்சி மதுரம் மருத்துவமனையில் புதிய சிகிச்சை பிரிவுகள் தொடக்கம்!
திருச்சி புத்தூர் குரு மருத்துவமனை சாலையில் அரசு தலைமை மருத்துவமனை எதிரில் அமைந்துள்ளது மதுரம் மருத்துவமனை. 145 வருடங்களாக 5ம் தலைமுறையும் தொடர்ந்து மருத்துவசேவை தொடரும் இம்மருத்துவமனையில் ஏற்கனவே பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது.
மகப்பேறு மருத்துவத்தில் பிரசித்தி பெற்ற இம்மருத்துவமனையில் அனைத்து பிரிவினருக்கும் தனித்தனியே சிறப்பு மருத்துவ வல்லுனநர்கள் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தற்போது கூடுதலாக NABH & ISO தரச்சான்றிதழுடன் கூடிய புதிய மேம்படுத்தப்பட்ட ICU பிரிவு, பல்சிகிச்சைக்கென தனிப்பிரிவு, மேலும், டயாலிசிஸ் சிகிச்கைக்கென தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
50 கூடுதல் படுக்கை வசதிகள், 24 மணிநேரதீவிர, அவசரசிகிச்சைபிரிவு, AC Labour (பிரசவ) suit, பாதபராமரிப்புமையம், X-RAY, Scan, Ultra Scan, ECHO, Physiotherapy பிரிவுகள் மற்றும் 24 மணிநேர Pharmacy வசதிகளையும் கொண்டுள்ளது.
இந்த புதிய பிரிவுகளை மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.ஜவன் மதுரம் தலைமையில், ஹைதராபாத் இந்தியன் மிஷன்ஸ் அசோசியோஷன் பொதுச்செயலாளர் ஆயர் ஐசக்சவுந்தரராஜன், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மண்டல மேலாளர் சுசில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய பிரிவுகளை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர்.
இவ்விழாவில், மருத்துவமனை பணியாளர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.