2020-21ம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி வசூலில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறைக்கு தீர்வு காண ஒரு சிறப்பு கடன் வாங்கும் சாளரத்தை இந்திய அரசு உருவாக்கி உள்ளது. கடன் வழங்குவதற்காக சிறப்பு சாளரத்தை 21 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களை மத்திய நிதியமைச்சகம் தேர்வு செய்துள்ளன.
ஆந்திரா, அசாம், பீகார், கோவா, குஜராத், ஹரியானா, இமாசலப்பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா, ஒடிசா, தமிழ்நாடு, திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களுக்கும், தில்லி, ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு ரூ.6,000 கோடி கடனாகப் பெற்று முதல் தவணையாக வழங்கி உள்ளது.
இந்த கடனின் வட்டி விகிதம் 5.19 சதவிகிதமாக இருக்கும். இது வாரம் தோறும் ரூ.6,000 கோடியை மாநிலங்களுக்கு வழங்கும் நோக்கத்தைக் கொண்டது. கடன் பெறும் காலம் பரவலாக 3 முதல் 5 ஆண்டுகள் இருக்கும்.