2 மாதத்தில் தொழில்முறை ஓட்டுனராகலாம்
அபிராமி டிரைவிங் ஸ்கூலில் பயிற்சி தொடக்கம்திருச்சி உழவர்சந்தை மைதானம் அருகில் அபிராமி டிரைவிங் ஸ்கூல் புதிதாக துவங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புடன் கூடிய 2 மாத பயிற்சி திட்டத்தினை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். டாடா மோட்டார், ராசி கார்ஸ் நிறுவனத்தினர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இதுகுறித்து அபிராமி டிரைவிங் ஸ்கூல் நிர்வாகி பூங்கொடி சுப்பிரமணியன் கூறும்போது, தமிழ்நாட்டில் முதல்முறையாக 2 மாதங்களில் டிரைவிங் கற்று கொடுத்து உடனடியாக வேலைவாய்ப்பு பெறும் வகையில் பயிற்சி அளிக்கிறோம். டிரைவிங் மட்டுமல்லாமல், மெக்கானிசம் குறித்தும் ஒரு மாதம் ஒர்க்ஷாப் பயிற்சியும் கொடுக்கிறோம். இதன் மூலம் குறுகிய காலத்திலேயே தொழில்முறை ஓட்டுனராக முடியும் என்று தெரிவித்தார்.