Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

காசுகளில் கணபதி வியக்க வைக்கும் தகவல்கள் !

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

காசுகளில் கணபதி கண்காட்சி

 

திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம், தென்னூர் நடுநிலைப்பள்ளி தொன்மை மன்றம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை
சார்பில் காசுகளில் கணபதி தலைப்பில் கணபதி உருவம் பொறித்து பண்டைய காலத்தில் வெளிவந்த நாணயங்கள், பணத் தாள்கள் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் விமலா வரவேற்றார். நூலகர் புகழேந்தி முன்னிலை வகித்தார்.

நாணயங்கள், பணத்தாள்கள் சேகரிப்போர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சந்திரசேகரன், முகமது சுபேர் உள்ளிட்டோர் காசுகளில் கணபதி குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

இந்தியாவில் விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் எனப்படுகிறது. இவர் கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும் யானையின் முகத்தினை கொண்டுள்ளதால் யானைமுகன் என்றும் அழைக்கப்பெறுகிறார்.

 

இந்துக்களின் புராணங்களில் விநாயகர் மற்றைய இந்துக்கடவுள்களான சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாகவும் முருகன் எனும் கடவுளின் அண்ணனாகவும் கூறப்படுகிறார். இக்கடவுளின் வாகனம் மூஞ்சூறு .

 

’கணேச புராணம்’, கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களிலும் நான்கு அவதாரங்களாக அவதரிப்பதாகக் கூறுப்படுகிறது.

இக்கணபதி காசு சங்க காலத்திற்கும் நவீன காலத்திற்கும் இடைப்பட்ட காலங்களில் வெளியிடப்பட்டுள்ளன. நாயக்கர் காலங்களில் பல காசுகள் பொறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தமிழர், நாணயச் செலாவணி முறையை அறிந்திருந்ததோடு தாமே நாணயங்களை உருவாக்கிப் புழக்கத்தில் விட்டனர். சங்க காலம் முதல் சோழர், பாண்டியர் காலங்கள் வரையிலுமான பழங்கால நாணயங்களில் உலோகங்களைப் பயன்படுத்தியுள்ளனர். அதன் வகை, தரம் முதலியன மக்களின் உற்பத்தித் திறனையும் அவர்களது பொருளாதார நிலையையும் எடுத்துக்காட்டுகிறது.

 

மேலும், நாணயங்கள் கிடைக்கின்ற இடத்தை வைத்து உரிய மன்னரின் நாட்டு எல்லை, வணிகத் தொடர்பு முதலியவற்றைக் கணிக்கலாம். சில நாணயங்கள் வணிகர்கள், பொற்கொல்லரின் அமைப்புகளால் ஆட்சியாளர்களின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டன. வாணிகமும் கைவினைத் தொழிலும் பெற்றிருந்த முதன்மைத்துவம் இதனால் வெளிப்படுகிறது. நாணயங்களில் அரசன், தெய்வங்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. சமயச் சின்னங்களும் அவற்றில் இடம்பெறுகின்றன. இவை அக்காலத்தின் கலைகளையும் சமயங்களையும் அறிந்துகொள்ள உதவுகின்றன.

நாணயத்தின் மதிப்பு அகமதிப்பு, புற மதிப்பு, தொன்மை மதிப்பு என்று பகுக்கப்படுகிறது. நாணயம் என்பது வணிகப் பொருளாக மட்டுமின்றி, அது வெளிவந்த காலத்தின் நாகரிகம், பொருளாதாரம், கலாசாரம், வரலாற்றுத் தகவல்களை தெரிவிக்கும் ஊடகமாக உள்ளது.

தமிழகத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் அனைவருமே தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தும் யானை, புலி, மீன், குதிரை, காளை, சிங்கம் போன்ற விலங்குகள், பறவைகள், மற்றும் சமயம் சார்ந்த உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது அதிகம் கிடைக்கும் தொன்மையான நாணயம் ராஜராஜன் காலத்து காசுகள் தான்.

கி.மு.முதலாம் நூற்றாண்டு வரையிலும் ரோமானிய செம்பு காசுகள் கிடைத்துள்ளது. முகலாய மன்னர் அக்பர் ராமர், சீதை உருவம் பொறித்த நாணயங்களும், ஹைதர் அலி, திப்புசுல்தான் ஆட்சியில், சிவன்- பார்வதி உருவம் பொறித்த நாணயங்களும் வெளிவந்துள்ளன. ஆற்காடு நவாப் ஆட்சியில், அதிக அளவில் சைவ, வைணவ கடவுள்களான சிவன், விஷ்ணு, கணபதி, முருகன், அனுமன் நாணயங்களை வெளியிடப்பட்டுள்ளன. இது அவர்கள்ஆட்சிக் காலத்தில் நிலவிய மத ஒற்றுமைக்கும், சகிப்புத்தன்மைக்கும் சான்றாக உள்ளது.

 

தமிழக நாயக்கர் கால வரலாற்றில் செவ்வப்ப நாயக்கர் காசுகள் (கி.பி.1532-1563) கிடைத்துள்ளன காசின் முன்பக்கத்தில் கணபதி அமர்ந்த நிலையில் உள்ளார் பின்பக்கத்தில் செவ்வப்ப என்று தெலுங்கு எழுத்துக்களில் மன்னரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. செம்பு உலகத்தில் நாணயம் கிடைத்துள்ளது.

காசுகளில் கணபதி

ரகுநாத நாயக்கர் (கி.பி 1600-1645) காசுகளில் காசின் முன்பக்கத்தில் கணபதி அமர்ந்த நிலையில் உள்ளார் பின்பக்கத்தில் ரகுநாத என்ற நாகரி எழுத்தில் இரண்டு வரிகளில் அளிக்கப்பட்டுள்ளது என்ற எழுத்து விளிம்பிற்கு வெளியே சென்றுள்ளது. உலகத்தில் கிடைத்துள்ள இக் காசு 3 கிராம் எடை கொண்டது ஆகும்

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

மேலும் மற்றொரு காசின் முன்பக்கத்தில் வல்லபகணபதி மனைவியுடன் உள்ளார் பின் பக்கத்தில் ஸ்ரீ ரகுநாத என்ற நகரில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது உலகத்தில் உள்ள இந்நாடகம் 1.3 கிராம் எடையுள்ளது. மற்றொரு காசின் முன்பக்கத்தில் அமர்ந்த நிலையில் கணபதி உள்ள பின்பக்கத்தில் ரகுநாதா என்று இரண்டு வரிகளில் தெலுங்கு வரிகளில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. செம்பு உலோகத்திலான காசு 2.2 கிராம் எடை உள்ளது

ஸ்ரீராமா காசுகளில் காசின் முன்பக்கத்தில் கணபதி அமர்ந்த நிலையில் உள்ள பின்பக்கத்தில் வட்டத்திற்குள் மலை உள்ளது. செம்பு உலகத்தில் நாணயம் கிடைத்துள்ளது மேலும் மற்றொரு நாணயத்தில் காசின் முன்பக்கத்தில் கணபதி அமர்ந்த நிலையில் உள்ளார் பின்பக்கத்தில் கிரந்த எழுத்துக்களில் ருமறுஜ என்று பொறிக்கப்பட்டுள்ளது நடுவில் காம்பில் பூ உள்ளன 2.6 கிராம் எடை உள்ளது.

மற்றொரு காசின் முன்பக்கத்தில் கணபதி அமர்ந்த நிலையில் உள்ள பின்பக்கத்தில் ராஜ இன்று நாகரிக எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது ஒரு கிராம் எடை கொண்டது.

 

ஸ்ரீராமா காசின் முன்பக்கத்தில் கணபதியின் கீழ் மூஞ்சுறு வாகனம் உள்ளது. பின்பக்கத்தில் லிங்கத்திற்கு மாலை போடப்பட்டுள்ளது. செம்பு உலோகத்திலான இன் நாணயம் 3.31 கிராம் எடை உள்ளது. மற்றொரு நாணயத்தின் முன் பக்கத்தில் கணபதி அமர்ந்துள்ளார் பின்பக்கத்தில் தேர் காணப்படுகிறது.

 

செம்பு உலோகத்திலான காசு 0.64 கிராம் எடையுள்ளது ஆகும். மற்றொரு நாணயங்களில் முன் பக்கத்தில் அமர்ந்த நிலையில் கணபதி உள்ளார் பின்பக்கத்தில் சிவலிங்கம் காணப்படுகிறது. மற்றொரு காசின் முன்பக்கத்தில் கணபதி அமர்ந்த நிலையில் உள்ளார் பின்பக்கத்தில் பூரணகும்பம் காணப்படுகிறது. செம்பு உலோகத்திலான இன் நாணயம் 2.8 கிராம் ஆகும். மற்றொரு காசில் கணபதி அமர்ந்த நிலையில் முன் பக்கத்திலும் பின் பக்கத்தில் லட்சுமி உருவம் அமர்ந்த நிலையில் காணப்படுகிறது.

 

திருவண்ணாமலை, தஞ்சை நாயக்கர், செஞ்சி நாயக்கர், பழநி, மைசூர் உடையார், வேணாடு சேரா, மதுரை நாயக்கர், ஆற்காடு நவாப் உட்பட பல்வேறு நாணயங்களில் கணபதி உருவம் நாணயங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மதுரை நாயக்கர் காசுகளில் கணபதி இடம்பெற்றுள்ளது காசின் முன்பக்கத்தில் கணபதி அமர்ந்த நிலையில் உள்ளார் பின்பக்கத்தில் கணபதி என்று தமிழில் இரண்டு வரிகளில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. காசு விநாயகர்சதுர்த்திகாக வெளியிடப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. மற்றொரு கணபதி அமர்ந்த நிலையிலும் கணபதி என்று தமிழில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

செஞ்சி நாயக்கர் காலங்களில் முத்தியாலு நாயக்கர் காலங்களில் காசின் முன்பக்கத்தில் அமர்ந்த நிலையில் கணபதி உள்ளார் பின் பக்கத்தில் ஸ்ரீ ராம என்று தெலுங்கு கன்னட எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது

 

மற்றொரு காசில் முன் பக்கத்தில் கணபதி அமர்ந்த நிலையில் உள்ளார். பின் பக்கத்தில் இடது பக்கம் நோக்கி நிற்கும்மூஞ்சூறு உள்ளது. மற்றொரு காரில் முன் பக்கத்தில் கணபதி பின் பக்கத்தில் நாயக்க மன்னர் உருவம் நின்ற நிலையில் பொறிக்கப்பட்டுள்ளது. மேற்கண்டவை காட்சிகளின் மூலம் சமயம் வெளி காட்டுவதாகவே அமைந்துள்ளது எடுத்துரைக்கிறது.

 

தாய்லாந்து நாட்டின் பத்து பாட் காசுகளில் விநாயகர் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

மேற்கண்ட நாணயங்களில் விநாயகர் இடம்புரி வலம்புரி அமர்ந்த நிலையிலும் நின்ற நிலையிலும், நாக பரானம் அணிந்தும் , நடன விநாயகராக காட்சி அளிக்கின்றார் மேலும் இரண்டு கரங்கள் உடைய விநாயகர் ஐந்து கரங்கள் உள்ள விநாயகரும் காசுகளில் காணப்படுகிறது.

 

பணத்தாளிலும் விநாயகர்

 

சுமார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளால் ஆனது தான் இந்தோனேசியா என்ற நாடு. இந்தோனேசியா இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடாகும். அங்கு 87% க்கும் அதிகமான இஸ்லாமியர்கள் வாழ்வதாக கூறுகிறார்கள். அந்நாட்டில் இரண்டு சதவிகிதத்திற்கும் குறைவான மக்களே இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள். எனினும், அந்நாட்டில் உள்ள பாலி தீவில் இந்து மக்கள் அதிகம் வாழ்கின்றனர். அவர்கள் செல்வத்தின் அதிபதியாக விநாயகர் கடவுளை கருதுகிறார்கள்.

முழு முதற்க்கடவுளான விநாயகருக்கு இந்தியாவில் மட்டுமின்றி இந்தோனேசியாவிலும் மதிப்பு அளிக்கப்படுகிறது. எனவே அந்நாட்டின் 20,000 ரூபாய் பணத்தாளில் விநாயகரின் திரு உருவம் 1998 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டுள்ளது. விநாயகர் இடம்பெற்ற 20 ஆயிரம் ரூபாய் பணத்தாளில், அந்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர் மற்றும் கல்விக்கு வித்திட்ட தியாக செம்மல் கிஹாஜர் தேவாந்தரா உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. பணத்தாளின் பின்புறத்தில் கல்வி நிறுவன வகுப்பறையில் மாணவர்கள் கல்வி பயிலும் படமும் இடம்பெற்றுள்ளது. இது இந்தோனேசிய பண்பாட்டுக்கும் இந்தியாவிற்கும் உள்ள தொடர்பை உலகுக்கு உணர்த்துவதாக அமைந்துள்ளது என்றனர்.

– வெற்றிச்செல்வன்

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.