மதுரை, செப்.12-
கரூா்; லோகநாதன், ரவிச்சந்திரன் உட்பட 7 போ் ஐகோா்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு ‘நியோமேக்ஸ்” பிராபா்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் மதுரை, திண்டுக்கல், நெல்லை, கோவில்பட்டி, திருச்சி மற்றும் தஞ்சை உட்பட பல மாவட்டங்களில் அலுவலகங்கள் அமைத்து, தங்கள் நிதி நிறுவனத்தின் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாகவும், நிலம் தருவதாகவும் ஆசை வாா்த்தை கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனா். இதை நம்பி ஆயிரக்கணக்கானோா் பல ஆயிரம் கோடி ரூபாயை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனா். ஆனால், முதலீட்டாளா்களுக்கு வட்டி, நிலம் கொடுக்காமல் நிறுவனத்தினா் ஏமாற்றினா். பாதிக்கப்பட்டவா்கள், மதுரை பொருளாதார குற்றப்பாிவு போலீசில் புகாா் கொடுத்தனா்;. இதன் அடிப்படையில் கபில், கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், வீரசக்தி; உட்பட பல இயக்குனா்களை போலீசாா் கைது செய்தனா். அவா்கள் இப்போது ஜாமீனில் உள்ளனா், நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட எங்களையும், பாதிக்கப்பட்டோா் பட்டியலில் சாட்சிகளாக சோ்த்து விசாாிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தனா்.
இந்த மனுவை விசாாித்த நீதிபதி முரளிசங்கா், ‘நியோமேக்ஸ் நிறுவனத்தில் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு விவசாரணையை துாிதப்படுத்த வேண்டும். நியோமேக்ஸ் நிறுவன மோசடி வழக்கில், பல்வேறு மாவட்டங்களில் இடைத்தரகா்களாக செயல்பட்டவா்களையும் கைது செய்து, அவா்களின் சொத்துக்களையும் பொருளாதார குற்றப்பிாிவு போலீசாா் பறிமுதல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டாா்.