ஏப்ரல் 1 முதல் பெருவணிகர்களுக்கு அலர்ட்
ஏப்ரல் 1 முதல் எளிமைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி.ஆர். படிவங்கள் அமலுக்கு வர உள்ளது. இந்த இ–இன்வாய்ஸ் முறை வருடத்திற்கு ரு.5 கோடி வரை வியாபாரம் செய்யும் பெருவியாபாரிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
மத்திய அரசு இம்முறையை கொண்டு வருவதால் ஒட்டு மொத்த வர்த்தகம் மற்றும் வரி செலுத்தும் முறையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தான். அரசிற்கு கிடைக்கும் வருவாயில், நேரடி வருவாயை விட ஜிஎஸ்டி எனும் வரியால் மறைமுக வருவாய் அதிகப்படியாக கிடைக்கிறது.
இந்த வருமானத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே இ–இன்வாய்ஸ் முறை நடைமுறைக்கு வர இருக்கிறது. இதனால் வியாபாரிகளின் ஒவ்வொரு பில்லும் ஜி.எஸ்.டி.யின் இணையதளத்தில் கவனிக்கப்படுவதால் வியாபாரிகளின் கணக்குகளை மிகவும் கவனமாக கையாள வேண்டிய நிலையில் உள்ளனர்.