Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பெட்ரோல் பங்க் போறீங்களா? ‘ஜீரோ’-வை பார்த்துக் கோங்க…

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

பெட்ரோல் நிரப்பும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். மாத சம்பளத்தில் பாதி பெட்ரோலுக்குத்தான் செலவழிக்க வேண்டியிருக்கிறது. அதிலும், தற்போது அனைவரது வீடுகளிலும், இருசக்கர வாகனம் தவிர்த்து, கார் உள்ளிட்ட வாகனங்களும் வைத்திருக்கின்றனர். இந்த நிலையில், வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் பெட்ரோல் நிலையங்களிலும் மோசடி நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இதற்கிடையே, பெட்ரோல் நிரப்பும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

பொதுவாக, கடைசி நேரத்தில் பெட்ரோல் பங்க் செல்லும் நாம், அவசர அவசரமாக பெட்ரோல் நிரப்பிவிட்டு அப்படியே செல்கிறோம். ஆனால், நாம் ஒரு விஷயத்தை கவனிக்க தவறிவிடுகிறோம். அது என்னவென்றால், பெட்ரோல் பங்க் ஊழியர் எவ்வளவுக்கு பெட்ரோல் நிரப்புகிறார், மீட்டரை பூஜ்ஜியத்தில் வைத்தாரா என்று நாம் கவனிப்பதில்லை. இது தவறு. உங்களுக்கு முன் யாராவது 100 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி இருப்பார்கள். ஆனால், ஊழியர்கள் மீண்டும் மீட்டரை பூஜ்ஜியத்திற்கு மாற்றியமைக்க மாட்டார்கள். இதனால், நீங்கள் அடுத்ததாக சென்று 500 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்புகிறீர்கள் என்றால், உங்கள் வாகனத்திற்கு வெறும் 400 ரூபாய் மதிப்புள்ள பெட்ரோல் மட்டுமே நிரப்பப்படும்.

எனவே, பெட்ரோல் நிரப்ப செல்கிறீர்கள் என்றால், காரை விட்டு இறங்கி, ஊழியர் மீட்டரை பூஜ்ஜியத்தில் வைத்து பின்பு பெட்ரோல் நிரப்புகிறாரா என்பதை சரிபார்க்க வேண்டும். இதனால் நீங்கள் ஏமாற்றப்படுவதில் இருந்து தப்பிக்கலாம். 100, 200, 500 மற்றும் 1000 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் பழக்கம் நம் அனைவருக்கும் இருக்கும். ஆனால், இதுதான் ஒரு பெரிய மோசடிக்கான வழி என்று கூறப்படுகிறது. பல பெட்ரோல் பங்குகளில், இந்த ரூபாய்க்கு இயந்திரம் முன்பே நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, நீங்கள் 100 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பினால், அதைவிட குறைவான பெட்ரோலே கிடைக்குமாம்.
ஆகையால், எப்போதும் 100, 200, 500 மற்றும் 1000 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்ப வேண்டாம். ரூ.110, ரூ.230, ரூ.555 போன்ற ஒற்றைப்படை எண்களில் பெட்ரோல் நிரப்ப அறிவுறுத்தப்படுகிறது. இதை செய்தால் மோசடியில் இருந்து தப்பிக்கலாம் மற்றும் முழுத் தொகைக்கும் பெட்ரோல் கிடைக்கும். மேலும், விலை மலிவு என்பதற்காக எங்காவது பெட்ரோல் நிரப்ப வேண்டாம். கலப்படம் செய்யப்பட்ட பெட்ரோல் அல்லது டீசல் உங்கள் காரின் எஞ்சினின் ஆயுளைக் கெடுத்துவிடும்.

ஏன் பிரீமியம் பெட்ரோல்? அதேபோல், பங்குகளில் சில ஊழியர்கள் உங்களை கேட்காமலே சாதாரண பெட்ரோலுக்குப் பதிலாக விலையுயர்ந்த 'பவர்' அல்லது 'பிரீமியம்' பெட்ரோலை போடுவார்கள். அந்த நேரத்தில், நீங்கள் பில் செலுத்தும்போது, உங்களிடம் அதிக பணம் வசூலிக்க வாய்ப்புள்ளது. இது பணத்தை வீணடிப்பதும் ஆகும். ஆகையால், உங்களுக்கு எந்த வகையான பெட்ரோல் தேவை என்று ஊழியர்களிடம் முன்பே சொல்வது சிறந்தது.
ஏன் பிரீமியம் பெட்ரோல்? அதேபோல், பங்குகளில் சில ஊழியர்கள் உங்களை கேட்காமலே சாதாரண பெட்ரோலுக்குப் பதிலாக விலையுயர்ந்த ‘பவர்’ அல்லது ‘பிரீமியம்’ பெட்ரோலை போடுவார்கள். அந்த நேரத்தில், நீங்கள் பில் செலுத்தும்போது, உங்களிடம் அதிக பணம் வசூலிக்க வாய்ப்புள்ளது. இது பணத்தை வீணடிப்பதும் ஆகும். ஆகையால், உங்களுக்கு எந்த வகையான பெட்ரோல் தேவை என்று ஊழியர்களிடம் முன்பே சொல்வது சிறந்தது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.