தீபாவளிக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஷாப்பிங் செய்யப் போறீங்களா…? இதையெல்லாம் மனசுல வச்சுக்கோங்க…!
கிரெடிட் கார்டுகளை எந்தவொரு எச்சரிக்கையும் இல்லாமல் பயன்படுத்துவதால், எதிர்பாராத கடன் அபராதங்கள் மற்றும் உங்களுடைய கிரெடிட் ஸ்கோருக்கு நீண்ட கால சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.
இந்த வருட தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக வங்கிகள், பல்வேறு பிராண்டுகள் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் ஷாப்பிங் செய்பவர்களை ஈர்ப்பதற்காக வெவ்வேறு பண்டிகைக் கால கிரெடிட் கார்டு டீல்களை வழங்கி வருகின்றன. கேஷ்பேக் மற்றும் டிஸ்கவுன்ட்கள் முதல் ஜீரோ காஸ்ட் EMIகள் மற்றும் ஃபிளாஷ் சேல் போன்ற எக்கச்சக்கமான தீபாவளி ஆஃபர்கள் வெளியாகி வருகின்றன.




