ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங் கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கல்லூரியின் இறுதி ஆண்டு இளங்கலை வேளாண் துறை மாணவர்கள் ஆகாஷ், எழில் ஆகாஷ்,ஆனந்த முருகன், ஶ்ரீதர் நவீன், முகைதீன் பைசல், பாலசுப்ரமணியன், ஆகாஷ் குபேந்திரன் மற்றும் சந்தோஷ் சிவன் வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் கிராம தங்கல் திட்டத்தில் ஶ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தங்கி விவசாயிகளை நேரில் சந்தித்து ஆலோசனைகளையும் செயல்முறை விளக்கமும் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் இந்த மாணவர்கள் ஶ்ரீவில்லிபுத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் தனலட்சுமி வேளாண்மை அலுவலர் குருலட்சுமி , பாட ஆசிரியர் டாக்டர். ஜெயந்தி மற்றும் குழு ஆலோசகர் சதீஷ் குமார் அறிவுரையின்படி, ஶ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள அச்சம்தவிழ்த்தான் கிராமத்தில் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசின் கீழ் வேளாண் துறை மூலம் செயல்படும் விவசாய திட்டங்கள் மற்றும் மானியம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் குறிப்பாக பயிர் காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் கூட்டுப்பண்ணையத்திட்டம் குறித்து விரிவாக விளக்கினர்.
திரு.மாரிஸ்வரன், அங்குசம் செய்தி