திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் பசுமை கட்டமைப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் பசுமை கட்டமைப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
சுற்றுச்சூழல் மாசினால் உலகமே பாதிப்புற்றிருக்கையில் சூழலை காக்கும் விதமாக காவேரி மகளிர் கல்லூரி எக்ஸ்னோரா மன்றம் செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் இக்கல்வி ஆண்டில் எக்ஸ்னோரா மாணவர்
மன்ற பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழாவுடன் ஜல சக்தி அப்யான் இட்டத்தின் கீழ் மழை எப்பொழுது பெய்கிறதோ, எங்கு பெய்கிறதோ, அதை சேமிப்போம் என்ற தலைப்பிலான நீர் மேலாண்மையில் பசுமை கட்டமைப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி செப்டம்பர் 16 அன்று எக்ஸ்னோரா மன்றம் சார்பாக
KRT அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஹால்மார்க் மேலாண்மை பள்ளி பேராசிரியரும், பெருநகர தொடர்பு அலுவலருமான முனைவர். கே. செந்தில் நாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்வின் தொடக்கமாக கல்லூரி முதல்வர் முனைவர் வே. சுஜாதா அவர்கள் வரவேற்புரை வழங்கனார். பின்னர் தமிழாய்வுத்துறை தலைவர் மற்றும் துணை முதல்வருமான முனைவர். சா. ராமலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். ஆங்கிலத்துறை தலைவர் ஜெயஸ்ரீ அகர்வால் சூழல் சார்ந்து நாம் செயல்பட
வேண்டியதன் அவசியத்தையும் மரங்கள் நடுவதன் மூலம் சூழலை பேணி காப்பதன் சிறப்பையும் எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினர் எக்ஸ்னோரா மாணவர் மன்ற பொறுப்பாளர்களை பதவியேற்க செய்ததோடு தம் உரையில் இன்றைய சூழலில் தண்ணீர் சேமிப்பதின் அவசியத்தையும் குடிநீரை
வீணாக்காத பயன்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.இறுதியாக எக்ஸ்னோரா மன்ற பொறுப்பாளர் அசினா பானு நன்றி உரை கூற நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.