Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

புத்தாண்டை வரவேற்கும் பிளாக் ஃபாரஸ்ட்

புத்தாண்டை வரவேற்கும் பிளாக் ஃபாரஸ்ட்

தீபாவளி என்றால் பலகாரங்கள். பொங்கல் பண்டிகை என்றால் பொங்கலும் கரும்பும். ரம்ஜான் என்றால் பிரியாணி. அது போல் கிறிஸ்துமஸ், புத்தாண்டு என்றால் நம் நினைவிற்கு வருவது ‘கேக்’.

வயதுவரம்பின்றி அனைவரையும் கவர்ந்து இழுப்பது இந்த கேக் வகைகள் ஆங்கிலேயர்கள் வருகைக்கு பின்னரே இந்தியாவில் பிரபலமானது. இயேசு கிறிஸ்து பிறந்தநாளை கிறிஸ்தவர்கள் கேக் செய்து ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்டே அந்நாளை கொண்டாடுவர். இதன் நீட்சியே இன்று பிறந்த நாள் என்றால் ‘கேக்’ கட்டாயம் என்றாகிவிட்டது. பிறந்தநாள் என்றால் கேக் வெட்டி மகிழ்வது தவிர்க்க முடியாத ஒரு சடங்காக மாறிவிட்டது.

இந்த கிறிஸ்துமஸ் கேக்கிற் கும் ஒரு வரலாறு உண்டு. 14ம் நூற்றாண்டில் கிறிஸ்துமஸ் நாளுக்கு முந்தைய நாள் “விஜில்” என்னும் உண்ணா நோம்பு இருப்பதை அம்மக்கள் கடைபிடித்து வந்தனர். நோம்பிற்கு மறுநாள் ஓட்ஸ் கஞ்சியை பருகுவர். இந்த கஞ்சியை ‘பாரிட்ஜ் என்பர். இந்த ‘பாரிட்ஜ்’ சற்று கூழாகவும் திடமானதாகவும் என வெண்ணெய் போன்று இருந்தது. பின்னர் 16ம் நூற்றாண்டில் கோதுமை மாவில் உலர்ந்த பழங்களை சேர்த்து தயாரிக்கப்பட்டதே முதல் கேக். இதுவே நாளடைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வந்தது.

வீடியோ லிங்:

இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே, உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாவு பிசைந்து கேக் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது, குடும்ப தலைவி ஒரு நாணயத்தை அந்த மாவுடன் கலந்து வைப்பார். கிறிஸ்துமஸ் அன்று கேக் வெட்டி குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கொடுப்பார்கள். அப்போது அந்த நாணயம் யாருக்கு கிடைக்கிறதோ அவரே அதிர்ஷ்டசாலியாக கருதப்படுவார்கள். கேக்கில் வைக்கப்படும் அந்த நாணயம் யாருக்கு வரும் என்ற எதிர்ப்பார்ப்போடே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவர்கள்.

பெரும்பாலும் கிறிஸ்துமஸ் கேக்கை ‘ப்ளம் கேக்’ என்றே அழைப்பர். பேக்கரிகளிலும் புத்தாண்டின் போது விதவிதமான கேக்குகள் தயாரித்து வழங்கினாலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒருவருக்குஒருவர் பரிமாறிக் கொள்ள அதிகமாக தயாரிப்பது இந்த ப்ளம் கேக்குகள் மட்டுமே.

திருச்சியில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பில் முன்னணி பேக்கரிகளில் ஒன்றாக திகழ்வது ப்ளாக் பாரஸ்ட் பேக்கரி. திருச்சி, தில்லைநகர் 1வது கிராஸ் மற்றும் அண்ணாமலை நகரில் உள்ள ‘ப்ளாக் பாரஸ்ட் பேக்கரி’ திருச்சி மக்களுக்கான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளுக்கான கேக் தயாரிப்பில் மிகுந்த கவனத்துடனும், அதீத ஈடுபாட்டுடனும் தயாரித்து வருகின்றனர். இது குறித்து உரிமையாளர் ப்ரேம்குமார் நம்மிடம் கூறுகையில்,

உரிமையாளர் பிரேம் குமார்

“கிறிஸ்துமஸ் ப்ளம் கேக்குகள் தயாரிப்பதில் ஒரு அலாதி கவனம் மேற்கொள்ளப்படுகிறது. பேரீட்சை, வெள்ளரி விதை, ஆரஞ்சு, திராட்சை, கலர் புரூட்ஸ், இஞ்சி, செர்ரி, அத்திப்பழம், ஏலக்காய், பட்டை, சுருள்பட்டை, கிராம்பு, கரம் மசாலா, முந்திரி, தேன் மற்றும் பழரசங்களை சேர்த்து சுமார் 6 மாதம் வரை பதப்படுத்தி பின்னரே கேக் தயாரிக்கப்படுகிறது.

ஆறு மாத காலம் பதப்படுத்தப்பட்டு பாரம்பரிய முறைப்படி இந்த ப்ளம் கேக்குகள் தயாரிக்கப்படுவதால் கூடுதல் சுவையோடு கிடைப்பதே ‘ப்ளாக் பாரஸ்ட் பேக்கரி’ கேக்குகளின் தனிச்சிறப்பாகும். ஒரு முறை எங்களிடம் ப்ளம் கேக் வாங்கியவர்கள் ஒவ்வொரு வருடமும் எங்களிடம் வாங்கத் தவறுவதில்லை. தரத்தில் காம்ப்ரமைஸ் செய்வதில்லை என்பதே இதற்கு காரணம். நட்ஸ் கேக்குகள் என்றால் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் அலாதி பிரியம்தான். அனைவரையும் சுண்டி இழுக்கும் நட்ஸ் கேக்குகளை நாங்கள் அசத்தல் சுவையுடன் தயாரித்து வழங்குகிறோம். கோதுமை மாவு, பேரிச்சம் பழம், நட்ஸ் மற்றும் ட்ரை புரூட்ஸ், பாதாம், வால் நட்ஸ், அத்திப்பழம், செர்ரி, டூட்டி புரூட்டி, கிரேன் பெர்ரி, உலர்ந்த கருப்பு திராட்சை போன்றவற்றைக் கொண்டு தயாரித்து தருவதால் இதன் சுவை என்றும் மறக்காது.

மேலும் ஸ்டார் ரிச் ப்ளம் கேக் என்ற புதிய வகையை அறிமுகப் படுத்தியிருக்கிறோம். ஸ்டார் வடிவில் ரூ.220 ரூபாய் மதிப்புள்ள ரீச் ப்ளம் கேக்கினை ரூ.150திற்கு விற்பனை செய்கிறோம். நியூ இயர் ஆஃபராக ரூ.700 மதிப்புள்ள பிளாக் பாரஸ்ட் கேக் ரூ.630திற்கும், ரூ.800 மதிப்புள்ள ஒயிட் பாரஸ்ட் மற்றும் பட்டர் ஸ்காட்டர் கேக் வகைகளை ரூ.730திற்கும், ரூ.900 மதிப்புள்ள சாக்கோ ட்ராப்ள் கேக் ரூ.750திற்கும் சிறப்பு சலுகையாக விற்பனை செய்கின்றோம். மேலும் காம்போ பேக் என்ற புதிய வகை அறிமுகம் செய்து ரூ.500 மதிப்புள்ள ஐந்து வகை கேக்குகள் ரூ.400க்கு விற்பனை செய்கின்றோம்” என்றார்.

வீடியோ லிங்:

கிறிஸ்மஸ் மற்றும் நியூ இயர் பண்டிகைக்காக ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே பதப்படுத்தப்பட்டு ஆரோக்கியத்திற்கு சிறிதும் தீங்கு வராத வகையில் இயற்கை முறையில் சுவையைக் கூட்டி தயாரிக்கப்படும் கேக்குகள் பிளாக் ஃபாரஸ்ட் பேக்கரியில் தற்போது விற்பனைக்கு உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.