ஷோரும் கண்டிசனில் உபயோகப்படுத்திய கார்கள் வாங்க
திருச்சி ROYAL CARS-க்கு வாங்க
கார் தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. முன்னர் கார் என்பது ஆடம்பரமாக கருதப்பட்டது பெரும் செல்வந்தர்கள் மட்டுமே உபயோகப்படுத்தும் ஒன்றாக இருந்தது. நடுத்தர மக்களின் கனவாகவே இருந்தது.
ஹிந்துஸ்தான் லீவரின் அம்பாஸிடர், பியட், பிளைமவுத் போன்ற ஒரு சில கார்களே புழக்கத்தில் இருந்த காலக்கட்டத்தில் 1985-ல் மாருதியின் வருகை அதை மாற்றி அமைத்தது.
குறைந்த விலையில், சிறிய ரகமாக, நடுத்தர மக்களின் கார் வாங்கும் கனவை நினைவாக்கியது. மாருதியின் கார் விற்பனை அளவு கண்டு பிரமித்த பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய கார் சந்தை மீது கால்பதித்தது. இதன் விளைவாக தற்போது, டாடா, ஹீண்டாய், ஹோண்டா, மஹிந்திரா, ஃபோர்டு என பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் செடான்வகை சிறிய கார்கள், உயர்தர SUV ரக கார்கள், சொகுசு கார்கள் என சந்தையில் 100-க் கணக்கான வகைகளில் கார்கள். சாலைகளில் செல்லும் விதவிதமான கார்களை கண்ட நடுத்தரவர்க்கத்தின் புதிய கார்களை ஷோரூமில் வாங்கும் அளவிற்கு பொருளாதாரம் தடையாக இருப்பதால் அவர்களின் ஒரே தீர்வு உபயோகப்படுத்தப்பட்ட SECOND HAND எனப்படும் கார்கள் தான்.
இந்த தொழிலில் 23 ஆண்டுகளுக்கு மேலாக கார்கள் விற்பனை செய்துவரும் திருச்சி மெயின்கார்டுகேட் பகுதியில் கலைஞர் அறிவாலயம் எதிரில் அமைந்துள்ள ராயல் கார்ஸ் உரிமை யாளர்கள் முகம்மது கனி மற்றும் சலாவுதீன் ஆகியோரிடம் பேசுகையில், நாங்கள் பொதுமக்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் தரமான கார்களை வழங்க வேண்டும் என்ற ஒரு நேரத்தில் கடந்த 23 ஆண்டுகளாக விற்பனையில் இருக்கிறோம்.
தரமான, வில்லங்கம் இல்லாத கார்களாக தேர்ந்தெடுத்து உயரிய முறையில் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர் குழுவை கொண்டு சிறுசிறு பழுதுகளையும் சரிபார்த்து கிட்டத்தட்ட ஷோரூம் கன்டிசனில் வாடிக்கையாளர்களுக்கு தருகிறோம்.
ரூ.50 ஆயிரத்தில் மாருதி கார், ரூ.50 லட்சத்தில் ஆடி பென்ஸ், ஙிவிகீ போன்ற சொகுசு கார்கள் வரை அனைத்தும் எங்களிடம் கிடைக்கும். வாகனம் வாங்க நிதி உதவிக்கும் ஏற்பாடு செய்து தருகிறோம். மேலும், கார் குறித்த ஆலோசனைகள் மற்றும் கார் வாங்க விரும்புவோர் 98424 27090, 98423 65851 எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.