Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

சான்றோர்க்கும், சமூக ஆர்வலருக்கும், வளர் இளம் பேச்சாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கும் விழா

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

சான்றோர்க்கும், சமூக ஆர்வலருக்கும், வளர் இளம் பேச்சாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கும் விழா

திருச்சி திருச்சிராப்பள்ளி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம் சார்பில் சான்றோர்க்கும், சமூக ஆர்வலருக்கும், வளர் இளம் பேச்சாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. முனைவர் அருணாச்சலம் வரவேற்றார் கோவிந்தம்மாள் தமிழ் மன்ற தலைவர் கோவிந்தசாமி தலைமை உரையாற்றினார். செயலாளர் பன்முக கலைஞர் முருகானந்தம் பொருளாளர் கவிஞர் மாரிமுத்து உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் தொழிலதிபர் மனோகரன் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

சான்றிதழ் வழங்கும் விழா
சான்றிதழ் வழங்கும் விழா

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தமிழ் பண்பாட்டு மைய இயக்குனர் முனைவர் திலகவதி, மயான பூமியில் மனைவி, மகளுடன் ஆதரவற்ற, அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் சமூக ஆர்வலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வளர் இளம் பேச்சாளர் சேவா சங்கம் மேல்நிலைப்பள்ளி மாணவி கமலி, உருமு தனலட்சுமி கல்லூரி மாணவி தஸ்லீம் பானு உள்ளிட்டோருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கம் பொறுப்பு அமைச்சர் உதயகுமார், கப்பல் கவிஞர் கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தம்மாள் தமிழ் மன்ற துணைத் தலைவர் நொச்சியம் சண்முகநாதன், இணைச் செயலர் பாலமுருகன், துணை செயலர்கள் வல்லநாடன் இல கணேசன், ஸ்ரீ வைகை மாலா, செயற்குழு உறுப்பினர்கள் நன்மாறன், ராஜேந்திரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிறைவாக அதவத்தூர் ராஜேந்திரன் நன்றியுரையாற்றினார்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.