புகார் பண்ணுங்க.. பணம் போச்சா.. இந்த நம்பருக்கு டயல் பண்ணுங்க..!
பொது மக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து தொகை எடுக்கப்பட்டது தெரிந்தால் உடனடியாக 155260 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். எவ்வளவு விரைவாக வாடிக்கையாளர் புகார் கொடுக்கிறாரோ அவ்வளவு விரைவாக பணத்தை காப்பாற்ற வாய்ப்பு உள்ளது.
பொது மக்கள் புகார் கொடுக்க வசதியாக cybercrime.gov.in என்ற தேசிய அளவிலான இணையதள சேவை ஏற்டுத்தப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் கூடுதல் டிஜிபி அம்ரேஸ் பூஜாரி தெரிவித்துள்ளார்.