Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

உங்கள் கனவு வீட்டை சொர்க்கமாக மாற்றும் கான்செப்ட் ஸ்டுடியோ

இமேஜ் பர்னிச்சர் நிறுவனத்தின் புதிய பாதை..!

சாமானிய மக்களின் கனவுகளில் ஒன்றாக இருப்பது சொந்த வீடு.  கட்டுமானத் துறையில் வங்கிகளின் கடனுதவி பங்களிப்பு அதிகரித்ததையடுத்து, அவை நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகின்றன. பல லட்சம் செலவு செய்து கட்டப்படும் வீடு, அலுவலகம் என்பது செங்கல் சுவர்களால் அமைக்கப்பட்ட கட்டிடம் மட்டுமல்ல, மனிதர்கள் குடியேறுவதோடு,  தேவையான பர்னிச்சர் முதலான பொருட்களை வீட்டிற்குள் கொண்டு வரப்படும் போது தான் கட்டிடம் என்பது முழுமையான வீடு, அலுவலகமாக  அழகு பெறுகிறது.

நடுத்தர மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்ததை அடுத்து குறு, சிறு உற்பத்தி நிறுவனங்களாக செயல்பட்டு வந்த பர்னிச்சர் தொழிலில், கார்ப்ரேட்  மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கால் பதிக்க, பர்னிச்சர் தொழில் என்பது பல்லாயிரம் கோடி ரூபாய் புழங்கும் சந்தையாக மாறி உள்ளது.

அத்தகையதொரு சந்தையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது, திருச்சி, தென்னூர், சாஸ்திரி சாலையில்  ( மகாத்மா காந்தி பள்ளி அருகில்) உள்ள இமேஜ் IMAGE HI-TECH FURNITURE CO ) பர்னிச்சர் ஷோரூம்.

தனது வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்ள விரும்பிய இதன் உரிமையாளர்  சமூக பணியில் ஈடுபட விரும்பி, அதற்கு தனது வியாபாரத்தையே ஒரு கருவியாக ஆக்கிக் கொண்டார். “என் எண்ணத்திற்கான வாசல் தான் இந்த  “இமேஜ் ஹைடெக் பர்னிச்சர் ஷோரூம் ” என்கிறார் உரிமையாளர் Rtn.பெலிக்ஸ் ராஜ்.

ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படித்த இவர், படிப்பிற்கான பணியில் ஈடுபட்ட போது அதில் பெரிதான மனநிறைவு இல்லாததால், பீரோ உள்ளிட்ட பர்னிச்சர் பொருட்களை சொந்தமாக தயாரித்து விற்பனை செய்யும் ஒரு பர்னிச்சர் கடையில் 1989-ல் ரூ.150 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். சுமார் 24 வருடம் அங்கு வேலை செய்த இவர் அந்த தொழில் பற்றி முழுமையாக எனது அறிவை வளர்த்துக் கொண்டார்.

2007-ல் சொந்தமாக தொழில் தொடங்கிய இவர் முதலில் தென்னூர் அண்ணாநகரில் 100 சதுர அடியில் பர்னிச்சர் கடையை தொடங்கினார்.

எனது பர்னிச்சர் ஷோரூம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், வாடிக்கையாளர்களின் தேவை என்னவாக இருக்கும், ஷோரூமில் நுழைந்தவுடன் அவர்களின் மனநிலை எப்படியாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வியாபார உத்திகளை கள ஆய்வு செய்தும், தொழில்முனைவில் அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனை என பலவாறாக இரண்டு ஆண்டுகள் சிந்தித்து, வடிவமைக்கப்பட்டதுதான் இமேஜ் பர்னிச்சர் ஷோரூம்.

“என்னுடைய ஷோரூமிற்கு வருகைதரும்  வாடிக்கையாளர்களிடம் பர்னிச்சர்களை விற்றே ஆகவேண்டும் என்கிற எண்ணத்தில் செயல் படுவதை விட,  அவர்களின் வீடு, அலுவலகம் குறித்து விசாரித்து, அந்த இடத்திற்குரிய சரியான பர்னிச்சராக எது அமையும் என தீர்மானித்த பின்னரே நான் விற்பனை செய்ய முற்படுவேன். வாடிக்கையாளர்களிடம் பணம் இருக்கிறது, பொருள் பிடித்துவிட்டது என்பதற்காக அவர்கள் இடத்திற்கு பொருத்தம் இல்லாத பர்னிச்சர்களை விற்றால் பின்னர் அதுவே அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்.

வீடோ, அலுவலகமோ உள்ளே நுழைந்தவுடன் அவர்களின் மனதை அங்கு நிரம்பியிருக்கும் பர்னிச்சர் பொருட்கள் ஆசுவாசப்படுத்த வேண்டும். அதுதான் அவர்கள் செலவழித்த பணத்திற்கு முழு பலனை தரும் என்ற கொள்கையை கொண்டே நான் இந்த பர்னிச்சர் தொழிலை செய்து வருகிறேன்.

அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தனி வீடுகளுக்கு தேவையான பர்னிச்சர் பொருட்களை கொடுப்பது மட்டுமல்லாது மாடுலர் கிச்சன்,  பூஜை அறைகள், வாரட்ரோப், டைனிங் செட், மேசைகள், சுவர் அலங்கார பொருட்கள், மெத்தைகள், அனைத்துவிதமான சோபாக்கள் முதலியவற்றையும் செய்து தருகிறோம்.

அரசு, தனியார் அலுவலகங்கள், வங்கிகள், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள்  போன்றவற்றிற்கு மாடுலர் ஒர்க் ஸ்டேஷன், ரிவால்விங் சேர்கள், விசிட்டர் சேர்கள், வகுப்பு மற்றும் ஆடிட்டோரியம் பர்னிச்சர்களையும், வீடு, அலுவலகத்திற்கு தேவையான இண்டீரியர் டிசைன்களையும் செய்து தருகிறோம். நாங்கள் பல பிரபலமான பர்னிச்சர் பிராண்டுகளை விற்பனை செய்தாலும் சாதாரண மக்களும் வாங்கக்கூடிய விலையில் தரமான, சேவை உத்திரவாதத்துடன் கூடிய பர்னிச்சர்களை சொந்த “பிராண்டில்” விற்பனை செய்கிறோம்.

அடுத்த திட்டமாக திருச்சியில் ஆறு இடங்களில் CONCEPT STUDIO நிர்மாணிக்கும் திட்டத்தில் உள்ளோம். வீடு கட்டிக்கொண்டிருப்பவர்கள்  கான்செப்ட் ஸ்டுடியோவிற்குள் நுழைந்தால்  Hall Interior, TV Wall Unit, Bedroom Designs, Modular Kitchen, Pooja room என அனைத்து இண்டீரியர் சம்பந்தப்பட்ட தேவைகளையும் ஒரே இடத்தில், அலைச்சலின்றி அறிந்து செயல்படுத்திட உதவிகரமாக இருப்பதே கான்செப்ட் ஸ்டுடியோவின் நோக்கமாகும் என்று நம்பிக்கை மிளிர பேசுகிறார் பெலிக்ஸ்ராஜ்.

திருச்சிராப்பள்ளி கட்டுமான சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினராக உள்ளதோடு, ரோட்டரி சங்கத்தின் மூலம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் பெலிக்ஸ் ராஜின் அலுவலக அறையை அலங்கரிப்பது ஏராளமான புத்தகங்கள். புத்தகங்களே விசாலமான அறிவை வழங்கி மனிதனை பண்படுத்துகிறது. புத்தகங்களை படிக்காமல் நான் படுக்கைக்கு செல்வதில்லை. புத்தகங்கள் படிப்பதே ஒரு நாளை நிறைவுற செய்கிறது  ” என்கிறார் பெலிக்ஸ்.

Leave A Reply

Your email address will not be published.