உங்களுடைய மாத வருமானத்தில் 20% தொகையை எமர்ஜென்சி ஃபண்ட் மற்றும் முதலீடுகளில் ஈடுபடுத்துவது ஒரு நல்ல பழக்கம்.

நவீன வாழ்க்கை முறை மற்றும் அதிகரிக்கும் செலவுகளுக்கு மத்தியில் சேமிப்பதற்கும், செல்வத்தை அதிகரிப்பதற்கும் மில்லியனல்கள் மற்றும் ஜென்-Z குறிப்பிடத்தக்க சவால்களை சந்திக்கின்றனர். சரியான திட்டமிடல் இல்லாமல் பணத்தை விரைவாக செலவு செய்து விடுகின்றனர். எனவே, எதிர்காலத்தைப் பாதுகாக்கும் பொருட்டு பணத்தைச் சேமிப்பதற்கு மில்லியனல்கள் மற்றும் ஜென்-Z-க்கு உதவும் சில முக்கியமான குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தவும்:
உங்களுடைய பணம் எங்கு செல்கிறது என்பதை அறியாமலேயே இருப்பதுதான் பணத்தைச் சேமிப்பதற்கான ஒரு முக்கியமான தடை. ஆன்லைன் புட் ஆர்டர்கள், கேப் ரைடுகள் மற்றும் சப்ஸ்கிரிப்ஷன்கள் போன்ற அன்றாட செலவுகள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தக்க அளவு பணத்தை எடுத்துக் கொள்கிறது. எனவே ஒவ்வொரு மாதமும் உங்களுடைய செலவுகள் அனைத்தையும் கண்காணித்து, எந்தெந்த செலவுகளைக் குறைக்கலாம் என்பதைக் கண்டுபிடிப்பது பொருளாதார வெற்றியை அடைவதற்கான அடித்தளமாக அமைகிறது.
உங்களுடைய வருமானத்தில் குறைந்தபட்சம் 20 சதவீத தொகையைச் சேமிக்கவும்:
உங்களுடைய மாத வருமானத்தில் 20% தொகையை எமர்ஜென்சி ஃபண்ட் மற்றும் முதலீடுகளில் ஈடுபடுத்துவது ஒரு நல்ல பழக்கம். செலவு செய்வதை காட்டிலும் சேமிப்பதற்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலமாக பொருளாதார நிலைத்தன்மையை விரைவாக அடையலாம்.


