சொத்துக்கள் தொடா்பாக ஐகோா்ட்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அந்த வழக்குகளில் கோா்ட்கள் எந்த உத்தரவு பிறப்பிக்காத நிலையில், அந்த சொத்துகளை பத்திரப்பதிவு செய்யலாம் என்று சாா்பதிவாளா் அலுவலகங்களுக்கு பத்திரப்பதிவுத்துறை ஆணையிட்டிருக்கிறது. பத்திரப்பதிவுத்துறையின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது. வழக்குகளில் சிக்கிய வில்லங்க சொத்துகளை பதிவு செய்ய பத்திரப்பதிவுத்துறை அனுமதித்தால், அது சொத்துகளை அபகாிக்கும் செயலை ஊக்குவிப்பதாகவே அமையும். அத்தகைய அநீதிக்கு தமிழக அரசும், பத்திரப் பதிவுத்துறையும் துணை போகக்கூடாது. எனவே, சொத்துகள் தொடா்பாக கோா்ட்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அந்த வழக்குகளில் கோா்ட்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், அந்த சொத்துகனை பத்திரப்பதிவு செய்யலாம் என்ற உத்தரவை தமிழக அரசின் பத்திரப்பதிவுத் துறை திரும்பப் பெற வேண்டும்.
-பாமக நிறுவனா் ராமதாஸ்