Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

2026-ல் வெள்ளி விலை எவ்வளவு தெரியுமா?

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இந்த மிகப்பெரிய அதிகரிப்புக்கு பின்னால் பல உலகளாவிய பொருளாதார, புவிசார் அரசியல் உள்ளிட்டவை இருப்பதாக தொழில்துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் மக்கள் தங்கத்திற்கு ஈடாக வெள்ளியிலும் முதலீடு செய்யத் தொடங்கினர். மேலும், தங்கம், பங்குகள், பத்திரங்கள் போன்ற பல சொத்து வகைகளை வெள்ளி விஞ்சியுள்ளது. இந்த நிலையில், முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முக்கிய முதலீட்டு ஆதாரமாக வெள்ளி வேகமாக வளர்ந்து வருவதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் மக்கள் தங்கத்திற்கு ஈடாக வெள்ளியிலும் முதலீடு செய்யத் தொடங்கினர். மேலும், தங்கம், பங்குகள், பத்திரங்கள் போன்ற பல சொத்து வகைகளை வெள்ளி விஞ்சியுள்ளது. இந்த நிலையில், முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முக்கிய முதலீட்டு ஆதாரமாக வெள்ளி வேகமாக வளர்ந்து வருவதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த மிகப்பெரிய அதிகரிப்புக்குப் பின்னால் பல உலகளாவிய பொருளாதார, புவிசார் அரசியல் உள்ளிட்டவை இருப்பதாகத் தொழில்துறை நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, உலகளவில் குறைந்த வட்டி விகிதங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பில் தொடர்ந்து நிலவும் பலவீனம் மற்றும் முதலீட்டாளர் முதலீட்டு திசையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை வெள்ளியை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றியுள்ளன. இதற்கிடையே, வெள்ளி மிகவும் நம்பகமான மாற்றாக மாறிவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்திய வெள்ளி மற்றும் நகைக்கடைக்காரர்கள் சங்கத்தின் (IBJA) துணைத் தலைவரும், ஆஸ்பெக்ட் குளோபல் வென்ச்சர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியுமான அக்ஷா காம்போஜ் கூறுகையில், பெடரல் வட்டி விகிதங்களைக் குறைக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகளும், டாலரின் மதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதாலும், உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் வெள்ளியை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகப் பார்க்கிறார்கள். இந்தப் போக்கு சிறிது காலம் தொடர வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, தற்போதைய உலகளாவிய சந்தை சூழல் நிச்சயமற்ற தன்மையால் நிரம்பி உள்ளதால், வெள்ளி அடிப்படையிலான முதலீட்டு தயாரிப்புகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. அதேபோல், வெள்ளிக்கான நீண்டகால தொழில்துறை தேவையும் வலுவாக உள்ளது. சோலார் பேனல்கள், பேட்டரிகள், சுத்தமான எரிசக்தி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளும் அதிகளவு வெள்ளியைப் பயன்படுத்துகின்றன. இதுவும் வெள்ளி விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்று அவர் கூறினார்.
இந்த மிகப்பெரிய அதிகரிப்புக்குப் பின்னால் பல உலகளாவிய பொருளாதார, புவிசார் அரசியல் உள்ளிட்டவை இருப்பதாகத் தொழில்துறை நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, உலகளவில் குறைந்த வட்டி விகிதங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பில் தொடர்ந்து நிலவும் பலவீனம் மற்றும் முதலீட்டாளர் முதலீட்டு திசையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை வெள்ளியை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றியுள்ளன. இதற்கிடையே, வெள்ளி மிகவும் நம்பகமான மாற்றாக மாறிவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.வரும் நாட்களில் வெள்ளி விலை எப்படி? நிபுணர்கள் தெளிவான கணிப்புகளை வழங்கி உள்ளனர். தற்போதைய சந்தை போக்கைக் கருத்தில் கொண்டு, அடுத்த இலக்குகள் $58–$60–$65ஆக உயர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. தொழில்துறை நுகர்வு, பாதுகாப்பான முதலீட்டு உணர்வு மற்றும் விநியோகக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் கலவையானது வெள்ளி விலையை உயர்த்த வாய்ப்புள்ளது என்றும் அக்ஷா காம்போஜ் கூறினார். முதலீட்டாளர்கள் முடிவுகளை எடுப்பதற்கு முன் கவனமாகப் பரிசீலித்து நிபுணர்களின் ஆலோசனையைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பகுப்பாய்வுகள் மற்றும் முதலீட்டு பரிந்துரைகள் தொடர்புடைய நிபுணர்களின் கருத்துகள் மட்டுமே. இதற்கு நியூஸ்18 தமிழ்நாடு பொறுப்பேற்காது. முதலீடுகளைச் செய்வதற்கு முன், நிதி நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.