பட்டுப்புடவை வாங்கலையோ…
திருச்சி ரயில்வே கோட்டத்தின் எல்லா முக்கிய ஸ்டேஷன்களிலும் “ஒரு நிலையம், ஒரு பொருள்” திட்ட துவக்கவிழா நடைபெற்றது. இதன்மூலம் புகழ்பெற்ற புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் ஓவியங்கள், திருபுவனம் பட்டுப்புடவைகள் வாங்கும் வாய்ப்பு ரயில்வே பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட கைவினைஞர்களுக்கு வருமானம் ஈட்டும் வாய்ப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.