கட்டட பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்தல் !
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டட பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா…
நீதிமன்ற ஆணைப்படியும், மாவட்ட பதிவாளர் அலுவலக அறிக்கையின் படியும் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான கூட்டமைப்பின் தேர்தல் தலைமை தேர்தல் அலுவலர் செல்வராஜ், துணை தேர்தல் அலுவலர்கள் ராஜா, வெங்கடாசலம் ,தேர்தல் கண்காணிப்பாளர்கள் சரவணன், சுந்தர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
புதிய மாநிலத் தலைவராக பொறியாளர் வைத்தியநாதன், செயலாளர் சிவகுமார், பொருளாளராக மாரியப்பன், துணை தலைவராக புருஷோத்தமன், இணைச் செயலாளராக முனுசாமி, மண்டல செயலாளராக பொறியாளர் சிவகுமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர் பொறியாளர் தென்னரசு உட்பட மாநில, மண்டல, நிர்வாக குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ்களை தலைமை தேர்தல் அலுவலர் செல்வராஜ் வழங்கினார்.
மேலும், புதிய மண்டல தலைவர்கள் வாசுதேவன், விஸ்வநாதன், முத்துகிருஷ்ணன், சுந்தரமூர்த்தி, செயலாளர் சிவக்குமார், பிரேமா, டேவிட் பிராங்கிளின், வேல்முருகன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் புதிய மாநில நிர்வாகிகள் பொறியாளர்களுக்கான கவுன்சில் அமைப்பதற்கு அரசிடம் முறையிடுவது, சென்னையில் நிர்வாக அலுவலகம் அமைக்க முயற்சிப்பது ,பசுமை கட்டுமானங்கள் மற்றும் பருவநிலை மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வை மக்களிடம் ஏற்பட்டது போன்ற பணிகளை விரைந்து செயல்படுத்த உள்ளார்கள் என்று நிர்வாகிகள் செய்தியாளரிடம் தெரிவித்தனர்.
– சந்திரமோகன்