உங்கள் முதலீட்டிற்கு அதிக லாபம் தரும் ஐந்து வங்கிகள்
பந்தன் பேங்க் : ரூ.1 லட்சம் வரையிலான சேமிப்புக்கு 4 சதவீதம் வட்டியும், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 கோடி வரையிலான சேமிப்புகளுக்கு 6 சதவீத வட்டியும், ரூ.10 முதல் 50 கோடி வரையிலான சேமிப்புகளுக்கு 6.55 சதவீத வட்டியும் கிடைக்கிறது.
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் : ரூ.1 லட்சத்துக்கு மேற்பட்ட சேமிப்புகளுக்கு 7 சதவீத வட்டி கிடைக்கிறது.
இண்டஸ் இண்ட் பேங்க் : ரூ.1 லட்சம் வரையில் 4 சதவீத வட்டியும், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 5 சதவீத வட்டியும், ரூ.10 லட்சத்துக்கு மேல் 6 சதவீத வட்டியும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கிடைக்கிறது.
ஆர்.பி.எல். பேங்க் : ரூ.1 லட்சம் வரையில் 4..75 சதவீத வட்டியும், ரூ.1 லட்சம் முதல் 10 லட்சம் வரை – 6 சதவீத வட்டியும், ரூ.10 லட்சம் முதல்.5 கோடி வரை 6.75 சதவீத வட்டியும் கிடைக்கிறது.
உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் : ரூ.1 லட்சம் வரையில் – 4 சதவீத வட்டியும், ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 5 சதவீத வட்டியும், ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை 5.25 சதவீத வட்டியும், ரூ.50 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை 6.25 சதவீத வட்டியும் கிடைக்கிறது.