Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

நடுத்தர மக்களை மிரட்டும் தங்கம்… கையிருப்போ 757 மெட்ரிக் டன்…

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

நடுத்தர மக்களை மிரட்டும் தங்கம்… கையிருப்போ 757 மெட்ரிக் டன்…

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதை பார்க்கும் நடுத்தர மக்கள் கையை பிசைந்து கொண்டு நிற்கின்றனர் .

ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூபாய் 40 ஆயிரத்தை கடந்து விட்ட நிலையில் இனிமேல் தங்கத்தின் விலை இறங்காதோ என்ற அச்சம் அனைவருக்கும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இந்தியா 757 மெட்ரிக் டன் தங்கத்தை இருப்பில் வைத்துள்ளது என்பதை அறிவீர்களா

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

உலக பொருளாதாரத்தை தங்கம். கச்சா எண்ணெய் ஆகிய இரு பொருள்கள் தான் நிர்ணயம் செய்கின்றன.கச்சா எண்ணெய் முற்றிலும் வர்த்தகம் சார்ந்தது என்பதால் அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் தங்கத்திற்குத் தான் எப்போதும் முதலிடம் அளிக்கப்படுகிறது.

நாட்டுக்கு நாடு காகித கரன்சிகள் புழக்கத்தில் இருந்தாலும் அவற்றின் மதிப்பு நிலையில்லாதது. ஆனால் தங்கத்தின் மதிப்பு எப்போதுமே ஏறுமுகத்தில் தான் உள்ளது.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

அதனால் எந்த நாடு அதிக அளவிலான தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளதோ, அந்த நாட்டின் நாணயம் தான் அதிக மதிப்பு பெறுகிறது. அதனால் தான் உலக நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு தங்கத்தை இருப்பில் வைக்க ஆர்வம் காட்டி வருகின்றன.

அதன்படி தற்போது வெளியாகியிருக்கும் புள்ளி விபரங்களின் அடிப்படையில் அதிகம் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 8 ஆயிரத்து 133 மெட்ரிக் டன் தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளது. அடுத்ததாக 3 ஆயிரத்து 358 மெட்ரிக் டன்னுடன் ஜெர்மனி இரண்டாவது இடத்தில் உள்ளது.

கடந்த 2000-ம் ஆண்டை காட்டிலும் 3 சதவீதம் அளவுக்கு ஜெர்மனியில் தங்கம் கையிருப்பு குறைந்துள்ளது.‌ எந்தவித மாற்றமும் இன்றி 2 ஆயிரத்து 451 மெட்ரிக் டன் தங்க கையிருப்புடன் இத்தாலி மூன்றாவது இடத்தில் உள்ளது. 

அடுத்தடுத்த இடங்களை முறையே பிரான்ஸ், ரஷ்யா, சீனா நாடுகள் பிடித்துள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டிடம் ஆயிரத்து நாற்பது மெட்ரிக் டன் அளவுக்கு தங்கம் கையிருப்பு உள்ளது.

845 டன் தங்கத்துடன் ஜப்பான் 8 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 757 மெட்ரிக் டன் தங்கம் கையிருப்புடன் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இரண்டாயிரமாவது ஆண்டில் 357 மெட்ரிக் டன் என்ற நிலையில் இருந்து தற்போது 757 மெட்ரிக் டன்னாக சுமார் 112 விழுக்காடு இந்தியாவில் தங்கம் கையிருப்பு அதிகரித்துள்ளது.

நெதர்லாந்து நாட்டிடம் 612மெட்ரிக் டன் தங்கம் உள்ளது.தைவான், போர்ச்சுக்கல், இங்கிலாந்து, ஸ்பெயின் நாடுகள் அடுத்தடுத்து இடங்களில் 500 மெட்ரிக் டன்னுக்கும் குறைவான தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளன.

 

உலக நாடுகளில் நிலவும் பொருளாதார மாறுபாட்டால் பொதுமக்களும் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. வர்த்தக ரீதியிலான பயன்பாடு மட்டுமல்லாமல் தங்க ஆபரணங்கள் மீதும் பொதுமக்கள் ஆர்வம் கொள்வதால் தங்கம் என்றுமே தங்கம் தான்….

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.