100 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட கிரேட் பாம்பே சர்க்கஸ் தற்போது திருச்சியில்!
ஆசியாவிலேயே மிகப்பெரியதாக கருதப்படும் கிரேட் பாம்பே சர்க்கஸ் திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரயில்வே கிரவுண்ட் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. உரிமையாளர் சஞ்சீவ் பாபு தலைமையில் இந்தியா, சீனா, ரஷ்யா எத்தியோப்பியான் கலைஞர்கள் 46 பேர் உட்பட 100 பேர் கொண்ட குழுவினர் பார்வையாளர்களை கவர பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சாகசங்கள் நடத்துகின்றனர். திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் 19/7/2022 மாலை முதல் காட்சியினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இங்கு பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் பார் விளையாட்டு, சைக்கிள் சாகசம், மோட்டார் சைக்கிள் சாகசம், ரிங் டான்ஸ் (வளையங்களை பயன்படுத்தி பல்வேறு வகையில் திறமையை காட்டுதல்) மணிப்பூர் கலைஞர்களின் ஜங்லிங் உட்பட சுமார் 200 வகையான நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றனர்.
பஞ்சவர்ணகிளிகள், நாய்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமிகளை கவரும் வகையில் உள்ளது. இடை இடையே கோமாளிகள் எனப்படும் பபூன்களின் சேட்டைகள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது.
நிகழ்ச்சிகள் குறித்து பாம்பே சர்க்கஸின் மேலாளர் கேத்தி உன்னி கூறும் போது: 1920-ல் மகாராஷ்டிராவில் முதன் முதலில் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக இந்தியா முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளோம். திருச்சியில் தினசரி மதியம் 1 மணி, மாலை 4 மணி மற்றும் 7 மணி என மூன்று காட்சிகள் நடைபெறுகிறது. அனுமதி கட்டணமாக ரூபாய் 100, 200, 300 என மூன்று பிரிவுகளாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளனர். மழை பெய்தால் தண்ணீர் புகாவண்ணம் (Water proof) கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் 32 நாட்கள் நடத்தப்படும் பார்வையாளர்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் நிகழ்ச்சிகள் சிறப்பாக திட்டமிடப்பட்டுள்ளனர் என்றார்.