ஐ.சி.ஐ.சி.ஐ லோம்பார்ட் ஆன்லைன் ப்ரீபெய்ட் கார்டு பரிவர்த்தனை நிறுவனமான ப்ரீ பே கார்டுடன் (Free Pay Card) இணைந்து சுகாதார காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு வருடத்திற்கு ரூ.699 செலுத்தி, இந்த காப்பீட்டை பெறலாம். இந்த காப்பீடு நாட்டின் எந்தவொரு அரசு அல்லது தனியார் மருத்துவமனையிலும் பெறும் சிகிச்சைகான இழப்பீடு வழங்கப்படும்.
ப்ரீ பே கார்டு வைத்திருப்பவர் விபத்துக்கு ஆளானால் அல்லது சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டியிருந்தால், அவருக்கு சுகாதார காப்பீடு மூலம் இழப்பீடு கிடைக்கும் இந்த சுகாதார காப்பீட்டு திட்டத்தில், சிகிச்சைக்கான பணம், இறப்பு நேர்ந்தால் இழப்பீடு, டெங்கு, மலேரியா போன்ற நோய்களுக்கான மருத்துவமனை சிகிச்சை மற்றும் பிற நோய்களுக்கான மருத்துவமனை சிகிச்சைக்கான இழப்பீடு கிடைக்கும்
மருத்துவமனையில் சிகிச்சைக்கான ரொக்க இழப்பீட்டின் கீழ், காப்பீட்டாளருக்கு மருத்துவமனையில் அதிகபட்சம் 30 நாட்களுக்கு ரூ.60,000 கிடைக்கும். விபத்தில் மரணம் ஏற்பட்டால் பெற்றோருக்கு ரூ.90,000மும் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால், ரூ.10 லட்சமும் கிடைக்கும்.
காப்பீட்டுத் திட்டத்தில் டெங்கு, சிக்குன்குனியா, மூளை காய்ச்சல் போன்றவற்றிற்கான சிகிச்சைக்கும் இழப்பீடு வழங்கப்படுகிறது. இதற்கு மருத்துவமனையில் குறைந்தது 48 மணி நேர உள்நோயாளியாக இருத்தல் வேண்டும்.
 
						 
			 
						

