உங்க அரிசியே வேணாம்…. ஈரான் வியாபாரிகள் வீம்பு
பாஸ்மதி அரிசி, டீ தூள் போன்ற பொருட்களை வருங்காலங்களில் இந்தியாவில் இருந்து கொள்முதல் செய்ய மாட்டோம் என்று ஈரான் வர்த்தகர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தியாவில் விளைவிக்கப்படும் பாஸ்மதி அரிசி, இந்தியாவில் மலை தோட்டங்களில் விளையும் சுத்தமான தேயிலையால் தயாரிக்கப்பட்ட டீ தூள் போன்றவற்றை ஈரானிய மக்கள் மிகவும் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு பொதுமக்கள் மிகவும் விரும்புவதால் ஆண்டுதோறும் 1.5 மில்லியன் டன் பாசுமதி அரிசியை ஈரான் இறக்குமதி செய்து வந்தது.
அதேபோல 30 மில்லியன் அளவுக்கு இந்திய டீ தூள் களையும் ஈரான் இறக்குமதி செய்தது.
ஆனால் வருங்காலங்களில் இந்திய தயாரிப்பு பாஸ்மதி அரிசி மற்றும் டீத்தூளை கொள்முதல் செய்வது தொடர்பாக எவ்வித ஒப்பந்தத்தையும் இனிமேல் மேற்கொள்ள போவதில்லை.
இறக்குமதியையும் நாங்கள் மேற்கொள்ளப் போவதில்லை என்று ஈரானிய இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உரிய காரணங்களை இறக்குமதியாளர்கள் தெரியப்படுத்தவில்லை என்றாலும் ரஷ்யா உக்கிரன் இடையே நடந்து வரும் போர் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.