5 ரூபாய் காசு இருந்தால் கிடைக்கும் பத்து லட்சம்..!
குயிக்கர், காயின் பஜார், ஈபே, இந்தியா மார்ட், ஓ.எல்.எக்ஸ். உள்ளிட்ட பல்வேறு வலைத்தளங்களில் உங்களிடம் உள்ள பழைமையான அரிய வகை நாணயங்களை விற்பனை செய்து சம்பாதிக்கலாம். பழைய நாணயத்தின் அசல் மதிப்பு மிகமிகக் குறைவு என்றாலும் அது அரிய வகையாகவும், அதிக டிமாண்ட் உள்ளதாகவும் இருந்தால் அதற்கு கோடிக் கணக்கில் பணம் கிடைக்கும்.
பொதுவாக பழைய நாணயங்களை சேகரிப்போர் பலரும் நாணயத்தின் பழைமைக்கு ஏற்ப எவ்வளவு விலையேனும் கொடுத்து வாங்கிடத் தயாராக இருக்கின்றனர். ஆனால் உங்களிடம் ஒரு 5 ரூபாய் நாணயம் இருந்தால் நாணயம் சேகரிப்போரை தாண்டி பலரும் அதை ரூ.10 லட்சம் வரை விலை கொடுத்தும் வாங்கத் தயாராக இருக்கின்றனர்.
உங்களிடம் மாதா வைஷ்ணவி தேவியின் உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் இருக்கிறதா..? அந்த நாணயங்கள் 2002ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டவையாக இருக்கிறதா..?
மாதா வைஷ்ணவி தேவி இருக்கும் நாணயங்கள் அதிர்ஷ்டம் தரும் பொருளாகப் பார்க்கப்படுகிறது. இதை வீட்டில் வைத்திருந்தால் செல்வம் பெருகும் என்று மக்கள் நம்புகின்றனர். எனவே இதற்கு நிறைய விலை கொடுத்து வாங்க தயாராக இருக்கின்றனர்.
மாதா வைஷ்ணவி தேவியின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் இருந்தால், நாணயத்தின் புகைப்படத்தைப் னிuவீளீக்ஷீ வெப்சைட்டில் பதிவுசெய்ய வேண்டும். அந்த நாணயத்தை வாங்க விரும்புபவர் உங்களைத் தொடர்பு கொண்டு வாங்குவார்கள். அதிர்ஷ்டம் இருந்தால் அந்த நாணயம் ரூ.10 லட்சம் வரையில் விலை போகும்.