விவசாய கடன்சில்லறை வணிகம், விவசாய கடன்களுக்கு முக்கியத்துவம் தனியார் வங்கி அறிவிப்பு!
தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் சில்லறை வணிகம் , விவசாயம் மற்றும் எம்.எஸ். எம்.இ துறை கடன்கள் மற்றும் கிளை , இணைய வழி விரிவாக்கத்துக்கு விரைவில் அதிக முக்கியத்துவம் கொடுக்க உள்ளது . அதுவும் தமிழ்நாட்டுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க இருக்கிறது .
சில்லறை வணிகம் , விவசாயம் மற்றும் எம்.எஸ்.எம்.இ பிரிவுகளில் கடந்த 3 ஆண்டுகளில் 15.21 % க்கு மேல் வளர்ச்சி கண்டுள்ளது . சில்லறை வணிகத்தை மேம்படுத்த மிகவும் கவனம் செலுத்தி வருகிறது . கார் மற்றும் தனிநபர்கள் கடன்களை அதிக அளவில் வழங்க திட்டமிட்டுள்ளது . வீட்டு கடன் வழங்குவதையும் துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளது .