திருச்சி பாலக்கரை மெயின் ரோட்டில் குயின்ஸ் வேர்ல்ட் எனப்படும் மகளிர்களுக்கான பிரத்தியேக ஷோரூம் திறப்பு விழா
திருச்சி பாலக்கரை மெயின் ரோட்டில் குயின்ஸ் வேர்ல்ட் எனப்படும் மகளிர்களுக்கான பிரத்தியேக ஷோரூம் திறப்பு விழா

திருச்சி பாலக்கரை காஜா மொய்தீன் சாலையில் நானா முனா பள்ளிவாசல் மாடியில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது ரைட் சாய்ஸ் ரெடிமேட் நிறுவனம் ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ரெடிமேட் ஷோரூமாக தொடங்கப்பட்டு மிகச் சிறப்பாக அறிவிக்கப்படும் தள்ளுபடிகள் மூலம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வந்த நிறுவனம் சமீபத்தில் மகளிர்களுக்கான ஆடைகளையும் விற்பனை செய்ய தொடங்கினர்.


மகளிர்களுக்கான ஆடை விற்பனையில் பெரும் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து பாலக்கரை மெயின் ரோடு பகுதியில் குயின்ஸ் வேர்ல்ட் எனப்படும் மகளிர்களுக்கான பிரத்தியேக விற்பனையாகத்தை தொடங்கியுள்ளனர். புர்கா, நைட்டி, உள்ளாடைகள், கவரிங் நகைகள், லேடிஸ் பேக், வாசனை திரவியங்கள் ஆகியவை விற்பனை செய்யப்படும் இந்த ஷோரூமை அமீர் ட்ராவல்ஸ் பிரைவேட் லிமிடெட் உரிமையாளர் சர்புதின் திறந்து வைத்தார்.

வருகை தந்தவர்களை இதன் உரிமையாளர்கள் சையது இப்ராஹிம், அமீர் பாஷா ஆகியோர் வரவேற்றார்கள். இவ்விழாவில் பாலக்கரை ரைட் சாய்ஸ் உரிமையாளர் சையது அபுதாகிர் உட்பட அப்பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.